ராப்ரி
From Wikipedia, the free encyclopedia
ராப்ரி ( IAST : Rabaḍī) என்பது ஒரு இனிப்பு ஆகும். இது பாலினை சுண்டக் காய்ச்சி தயாரிக்கப்படுகிறது. இது இந்தியத் துணைக்கண்டத்தினைச் சார்ந்த பாலினால் தயாரிக்கப்பட்ட இனிப்பு ஆகும். பாலை குறைந்த வெப்பத்தில் நீண்ட நேரம் கொதிக்க வைத்து, பாலில் உள்ள நீர் ஆவியாகி பாலின் அடர்த்தி அதிகமாகி நிறமானது வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறமாக மாறும் வரை காய்ச்சப்படுகிறது. வெல்லம், மசாலாப் பொருட்கள் மற்றும் பருப்புகள் ஆகியவை சுவைக்காகச் சேர்க்கப்படுகின்றன. இது குளிர்விக்கப்பட்டு இனிப்பாகப் பரிமாறப்படுகிறது. இரசபாலி, செனா கீரி மற்றும் கிரா சாகர போன்ற பல இனிப்புகளில் ராப்ரி முக்கிய மூலப்பொருள் ஆகும்.
இதேபோன்ற உணவு பசுந்தி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.