ரஷீத் கான் அர்மான் (Rashid Khan Arman, பஷ்தூ: راشد خان ارمان; பிறப்பு 20 செப்டம்பர், 1998) பொதுவாக ரஷீத் கான் என அறியப்படும் இவர் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் ஆப்கானித்தான் அணிக்காக அனைத்து விதமான பன்னாட்டுப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.[1] இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் இவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
ரஷீத் கான்
Thumb
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரஷீத் கான் அர்மான்
பிறப்பு20 செப்டம்பர் 1998 (1998-09-20) (அகவை 25)
நாங்கர்கர், ஆப்கானித்தான்
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது-கை நேர் விலகு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 9)14 ஜூன் 2018 எ. இந்தியா
கடைசித் தேர்வு27 நவம்பர் 2019 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 36)18 அக்டோபர் 2015 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாப11 நவம்பர் 2019 எ. மேற்கிந்தியத் தீவுகள்
இ20ப அறிமுகம் (தொப்பி 27)26 அக்டோபர் 2015 எ. சிம்பாப்வே
கடைசி இ20ப17 நவம்பர் 2019 எ. மேற்கிந்தியத் தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2016–2017கொமில்லா விக்டோரியன்ஸ்
2017–தற்போதுசன்ரைசர்ஸ் ஐதராபாத்
2017கயானா அமேசான் வாரியர்ஸ்
2017–தற்போதுபந்த்-ஏ-அமீர் டிராகன்ஸ்
2017/18–தற்போதுஅடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்
2018–தற்போதுசஸ்செக்ஸ்
2018டர்பன் ஹீட்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப இ20ப முத
ஆட்டங்கள் 3 68 41 7
ஓட்டங்கள் 104 903 132 229
மட்டையாட்ட சராசரி 20.80 20.52 14.66 28.62
100கள்/50கள் 0/1 0/4 0/0 0/2
அதியுயர் ஓட்டம் 51 60* 33 52
வீசிய பந்துகள் 734 3,378 936 1,913
வீழ்த்தல்கள் 20 131 79 55
பந்துவீச்சு சராசரி 18.00 17.80 12.00 16.12
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 4 2 7
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 0 0 2
சிறந்த பந்துவீச்சு 6/49 7/18 5/3 8/74
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 21/– 14/– 0/–
மூலம்: Cricinfo, 27 நவம்பர் 2019
மூடு

பிப்ரவரி 2018 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இவர் முதல் இடத்தில் இருந்தார். இதன்மூலம் மிக குறைந்த வயதில் முதலிடம் பிடித்தவர் எனும் சாதனையைப் படைத்தார்,[2] அடுத்த சில மாதங்களில் இவர் பன்னாட்டு இருபது20 போட்டியின் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையிலும் இவர் முதல் இடம் பிடித்தார்.[3] ஜூலை 2017 ஆம் ஆண்டில் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார்..[4][5]

மார்ச், 2018 ஆம் ஆண்டில் 2018 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடருக்கான தகுதிச் சுற்றுப்போட்டியில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது19 ஆண்டுகள் 165 நாள்கள் ஆகும்.இதன்மூலம் மிக குறைந்த வயதில் பன்னாட்டுப் போட்டிகளில் தலைவர் ஆனவர் எனும் சாதனையைப் படைத்தார்.[6] மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான் இறுதிப் போட்டியில் ஷாய் ஹோப்பை வீழ்த்தினார். இது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவரது நூறாவது வீழ்த்தலாக அமைந்தது. இவர் 44 போட்டிகளில் விளையாடி 100 மட்டையாளர்களை வீழ்ததியதன் மூலம் மிக குறைவான போட்டிகளில் 100 மட்டையாளர்களை வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.[7] இதற்கு முன்னதாக ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் மிட்செல் ஸ்டார்க் 52 போட்டிகளில் 100 மட்டையாளர்களை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.[7] 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவர் சிறப்பாக விளையாடினார். பன்னாட்டு இருபது20 போட்டிகளில் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளராகத் ரஷீத் கான் திகழ்வதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.[8]

உள்ளூர்ப் போட்டிகள்

டிசம்பர் 7, 2016இல் அபுதாபியில்(அமீரகம்) நடைபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். அந்தப் போட்டியில் இவர் ஆட்டத்தின் முதல் பகுதியில் 48 ஓட்டங்கள் கொடுத்து 4 மட்டையாளர்களை வீழ்த்தினார். பின் இரண்டாவது பகுதியில் 74 ஓட்டங்கள் கொடுத்து 8 மட்டையாளர்களை வீழ்த்தினார். பிறகு மட்டையாளராக ஆடியபோது ஆட்டத்தின் இரு பகுதிகளிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் முறையே 25 ஓட்டங்கள் மற்றும் 52 ஓட்டங்கள் எடுத்தார்.[9]

இந்தியன் பிரீமியர் லீக்

2017

பிப்ரவரி , 2017ஆம் ஆண்டில் 2017 இந்தியன் பிரிமியர் லீக் தொடருக்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் 4 கோடி ரூபாய் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது.[10][11] இதன்மூலம் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் முதல் ஆப்கானித்தான் வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[12] 14 போட்டிகளில் விளையாடிய இவர் 358 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 17 மட்டையாளர்களை வீழ்த்தினார். ஒரு நிறைவுக்கு சராசரியாக 6.62 ஓட்டங்களை மட்டுமே கொடுத்திருந்தார். இவரின் சிறந்த பந்துவீச்சு 3/19 ஆகும்.[13]

2018

2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ஏலத்தின்போது இவரை ஏலத்தில் எடுப்பதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது இரு அணிகளும் 8.60 கோடி ரூபாய் கேட்டன . பின் பஞ்சாப் அணி 9 கோடி ரூபாய் கேட்டு ஏலத்தில் வென்றது. ஆனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பினைப் பயன்படுத்தி இவரை அந்த அணி நிர்வாகம் 9 கோடி ரூபாய் மதிப்பில் இவரை ஏலத்தில் தக்கவைத்தது.[14]

மே 19 அன்றுவரை 13 போட்டிகளில் விளையாடிய இவர் 373 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 16 மட்டையாளர்களை வீழ்த்தினார். ஒரு நிறைவுக்கு சராசரியாக 7.17 ஓட்டங்களை மட்டுமே கொடுத்துள்ளார். இவரின் சிறந்த பந்துவீச்சு 3/19 ஆகும். இவரின் பந்துவீச்சு சராசரி 23.31 ஆகும்.[13] 2018 தொடரில் அதிக மட்டையாளர்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார்.

பன்னாட்டுப் போட்டிகள்

சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிராக அக்டோபர் 18,2015 இல் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[15] பன்னாட்டு இருபது20 போட்டியில் அக்டோபர் 26இல் சிம்பாப்வே அணிக்கு எதிராக அறிமுகமானார்.[16]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.