![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/71/N_Rangaswamy.jpg/640px-N_Rangaswamy.jpg&w=640&q=50)
ரங்கசாமியின் நான்காவது அமைச்சரவை
புதுச்சேரி அமைச்சரவை / From Wikipedia, the free encyclopedia
2021 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ந. ரங்கசாமி 2021 மே 7 அன்று புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார். [1] [2] 2021 மே 25 தேதியிட்ட புதுச்சேரி அரசாணை அறிவிப்பின்படி, அமைச்சரவையில் அமைச்சர்களாக ஏ. நமச்சிவயம், கே. லட்சுமிநாராயணன், சி. தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, ஏ. கே. சாய் ஜே. சரவணக்குமார் ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்கபட்டனர்.
19வது அமைச்சரவை - புதுச்சேரி | |
![]() | |
உருவான நாள் | 7, மே 2021 |
---|---|
மக்களும் அமைப்புகளும் | |
அரசுத் தலைவர் | ந. ரங்கசாமி |
நாட்டுத் தலைவர் | துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் |
நீக்கப்பட்ட அமைச்சர்கள் (இறப்பு/பதவி விலகல்/பதவி நீக்கம்) | 0 |
அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை | 6 |
சட்ட மன்றத்தில் நிலை | பெரும்பான்மை (கூட்டணி) |
எதிர் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
எதிர்க்கட்சித் தலைவர் | ஆர். சிவா |
வரலாறு | |
தேர்தல்(கள்) | 2021 |
Legislature term(s) | 3 ஆண்டுகள், 77 நாட்கள் |
முந்தைய | நாராயணசாமி அமைச்சரவை |
ரங்கசாமி அமைச்சரவையில் லட்சுமிநாராயணன், டி. தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா ஆகியோர் என். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள், புதுச்சேரி ஒன்றியப் பிரதேச அமைச்சரவையில் பா. ஜ. கட்சி இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை. அமைச்சரவையில் சந்திர பிரியங்கா இடம்பெற்றிருப்பதானதன் மூலமாக 41 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் ஒரு பெண் உறுப்பினர் இடம்பெற்றிருப்பது மற்றொரு முக்கிய விசயமாகும். [3] [note 1]