யோன் அரிசன்
From Wikipedia, the free encyclopedia
யோன் அரிசன் (John Harrison) என்பவர் தானே கல்விகற்ற ஆங்கிலேயத் தச்சரும், மணிக்கூடு செய்பவரும் ஆவார். இவர், கடற்பயணங்களின்போது கப்பல்களின் அமைவிட நெடுங்கோட்டைக் கண்டறிவதற்கு நெடுங்காலமாகத் தேவைப்பட்ட கடற் காலமானி என்னும் கருவியைக் கண்டுபிடித்தார். இதன் மூலம், கடற்பயணக் காலத்தில் பாதுகாப்பான தொலைதூரக் கடற்பயணத்தின் சாத்தியப்பாட்டை அதிகரிப்பதில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படக் காரணமானார். 1707 சில்லி கடற்படை துன்பியல் நிகழ்வுக்குப் பின்னர் கடற் பயணங்களின்போது பாதுகாப்பு என்னும் விடயம் ஒரு முக்கிய பிரச்சினையாகக் கருத்தில் கொள்ளப்பட்டது. நெடுங்கோட்டுச் சட்டத்தின் கீழ் இதற்கான தீர்வுக்காக £20,000 பெறுமதியான பரிசையும் பிரித்தானிய நாடாளுமன்றம் அறிவித்தது.[1] 2002ல் பிபிசி நடத்திய 100 சிறந்த பிரித்தானியர்களுக்கான வாக்கெடுப்பில் அரிசனுக்கு 39வது இடம் கிடைத்தது.[2]
யோன் அரிசன் | |
---|---|
P.L. Tassaert's half-tone print of Thomas King's original 1767 portrait of John Harrison, located at the Science and Society Picture Library, London | |
பிறப்பு | (1693-03-24)24 மார்ச்சு 1693 யோக்சயரின் வேக்ஃபீல்டுக்கு அண்மையில் உள்ள ஃபோல்பி |
இறப்பு | 24 மார்ச்சு 1776(1776-03-24) (அகவை 83) இலண்டன் |
வாழிடம் | ரெட் லயன் சதுக்கம் |
தேசியம் | ஐக்கிய இராச்சியம் |
துறை | கால அளவியல் |
அறியப்படுவது | கடற் காலமானி |
விருதுகள் | கொப்ளி பதக்கம் (1749) |