யூத சமயத்தில் பெண்கள்
From Wikipedia, the free encyclopedia
யூத சமயத்தில் பெண்களின் பங்கு எபிரேய வேதாகமம், யூத மத குருமார்களின் வாய்வழி சட்டங்கள், பழக்கவழக்கம் மற்றும் பண்பாட்டுக் காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. எபிரேய பைபிள் மற்றும் தல்மூத் போன்ற யூத இலக்கியங்கள் பெண்கள் குறித்து பல முன்மாதிரிகளைக் குறிப்பிட்டாலும், யூத மதச் சட்டம் பெண்களை வெவ்வேறு சூழ்நிலைகளில் வித்தியாசமாக நடத்துகிறது. ஐக்கிய அமெரிக்க நாட்டின் பியூ ஆய்வு மையத்தின் 2017ஆம் ஆண்டின் அறிக்கையின் படி உலகளாவிய யூத மக்கள் தொகையில், பெண்கள் 52% விழுக்காட்டிற்கு மேல் உள்ளனர்.[1]
பாலினம், யூதக் குடும்ப வரிசையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது: பாரம்பரிய யூத சமயத்தில், வாரிசுகள் ஒரு தாயின் மூலம் கடத்தப்படுகிறது. இருப்பினும் தந்தை, மகன்கள் மற்றும் மகள்களை விவரிக்க தோரா பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டு: "தீனா, யாக்கோபின் மகள்".[2]
லேவியின்[3] தகுதி, லேவியின் பரம்பரை பரம்பரையாக வந்த ஒரு யூத ஆணுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது;[3] அதேபோன்று பாட்-லேவி என்பவளின் நிலை, தனது யூத தந்தையிடமிருந்து வந்தவளாக கொள்ளப்படுகிறது.