From Wikipedia, the free encyclopedia
யுஎஸ்எஸ் நிமிட்ஸ் (USS Nimitz (CVN-68)) உலகில் உள்ள மிகப் பிரமாண்டமான அணு சக்தி போர்க் கப்பல்களில் ஒன்று. 1975 ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கிய இந்தக் கப்பல் 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட விமானம் தாங்கிக் கப்பல் ஆகும்.
சான் டியேகோ கடலில் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் (CVN-68) | |
கப்பல் (United States) | |
---|---|
பெயர்: |
யுஎஸ்எஸ் நிமிட்ஸ் USS Nimitz |
நினைவாகப் பெயரிடப்பட்டது: | Fleet Admiral செஸ்ட்டர் நிமிட்ஸ் |
பணிப்பு: | 31 மார்ச் 1967 |
கட்டியோர்: | Newport News Shipbuilding |
துவக்கம்: | 22 சூன் 1968 |
வெளியீடு: | 13 மே 1972 |
பணியமர்த்தம்: | 3 மே 1975 |
மீள்வகைப்பாடு: | CVN-68 |
சொந்தத் துறை: | Naval Air Station North Island, சான் டியேகோ, கலிபோர்னியா |
குறிக்கோள்: | குழுப்பணி, ஒரு கொள்கை |
அழைக்கும்பெயர்: | "Old Salt" |
நிலை: | பாவிப்பில் உள்ளது |
இந்தக் கப்பலில் 75 விமானங்களை நிறுத்தி வைக்க முடியும். மணிக்கு 30 கடல் மைல் வேகத்தில் இந்தக் கப்பல் பயணிக்கும். கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த [ஈராக்]] போரின்போது இந்தக் கப்பலிலிருந்துதான் அமெரிக்க விமானங்கள் ஈராக்கைத் தாக்கி வந்தன. இந்தக் கப்பலில் 2 அணு உலைகள் உள்ளன. அணு சக்தியின் மூலம் இந்தக் கப்பல் இயங்குகிறது.
இந்த கப்பல் 4 1/2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1092 அடி நீளம், 252 அடி அகலம் உள்ளது. 23 மாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 65 போர் விமானங்கள் உள்ளன. இவற்றுடன் வீரர்கள் பயணம் செய்யும் விமானம், ஆபத்து நேரத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடும் விமானம், ஹெலிகாப்டர் ஆகியவையும் உள்ளன. 30 வினாடியில் ஒரு விமானம் கப்பலில் இருந்து புறப்படும் அளவுக்கு வசதி உள்ளது.
1975-ம் ஆண்டு மே 3-ந் தேதி இந்த கப்பல் கட்டி முடிக் கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. நிமிட்ஸ் கப்பலை உருவாக்க ஆன செலவு ரூ. 18,000 கோடி. 32 வருடமாக பணியில் இருக்கிறது. 2-ம் உலகப் போரில் அமெரிக்காவின் பசிபிக் கடல் பகுதி ராணுவ கமாண்டராக இருந்து பெரும் சாதனை புரிந்த ஜெஸ்டர் நிமிட்ஸ் பெயர் இந்த கப்ப லுக்கு சூட்டப்பட்டது.
கப்பலில் 53 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரி உள் ளது. அதில் 6 டாக்டர்கள் பணி யாற்றுகிறார்கள். தனியாக 5 பல் டாக்டர்களும் இருக்கின்றனர். இதில் முகமது கமிஸ் என்ற இந்திய வம்சாவளி டாக்டரும் பணியாற்றுகிறார்.
கடல் நீரை நல்ல நீராக மாற்றி பயன்படுத்த அதற்கான தனி தொழிற்கூடம் உள்ளது. இவற்றின் மூலம் தினமும் 4 லட்சம் காலன் நல்ல தண்ணீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை வீரர்களின் தேவைக் கும் மற்ற பணிகளுக்கும் பயன் படுத்தப்படுகிறது.
உணவு பொருட்களை 70 நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கும் குளிர்சாதன வசதிகளும் உள்ளன.
கப்பலிலேயே தனி தபால் நிலையம் உள்ளது. ஆண்டுக்கு 10 லட்சம் கடிதங்களை இது கையாள்கிறது. தினமும் தபால் நிலைய கடிதங்களை பட்டுவாடா செய்யும். இதற்காக தினமும் வேறு கப்பல்கள் மூலமாகவோ அல்லது விமானங்கள் மூலமாகவோ இங்கு கடிதங்கள் கொண்டு வரப்படும்.
வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் வழிபாடு நடத்துவதற்காக 3 வழிபாட்டு தலங்களும் கப்பலில் உள் ளன.
கப்பலில் தேவைக்கு மேல் 50 சதவீதம் ஆயுதங்களை வைத்து கொள்ளவும், விமா னங்களுக்கு தேவையான 2 மடங்கு எரி பொருளை சேமித்து வைக்கவும் வசதி உள்ளது. விமானங்களை உள் பகுதிக்குள் கொண்டு சென்று பழுது பார்க்கும் தனி ஒர்க்ஷாப் உள்ளது.
தனி உணவு கூடம், மாநாட்டு அறை, பொழுது போக்கு கூடம் என அனைத்து வசதிகளும் உள்ளன. மொத்தத் தில் ஒரு சிறிய நகரத்தில் உள்ள அத்தனை வசதிகளும் உள்ளன. இந்த கப்பலை மிதக்கும் நகரம் என்று அழைக்கின்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.