யங்கோன் பிரதேசம்
மியான்மரில் உள்ள மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
யங்கோன் பிரதேசம் (Yangon Region, முன்னர் ரங்கூன் பகுதி) மியான்மரின் ஒரு நிர்வாக பிரிவுப் பிராந்தியம் அல்லது மாநிலமாகும். இது கீழ் மியான்மரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி வடக்கு மற்றும் கிழக்கில் பாகோ பகுதியையும், தெற்கே மார்டாபன் வளைகுடாவையும், மேற்கில் அயெய்வரிடி பகுதியையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
விரைவான உண்மைகள் யங்கோன் பிரதேசம் ရန်ကုန်တိုင်းဒေသကြီး, மியான்மரின் மாநிலம் ...
யங்கோன் பிரதேசம்
ရန်ကုန်တိုင်းဒေသကြီး | |
---|---|
மியான்மரின் மாநிலம் | |
Location of Yangon Region in Myanmar | |
ஆள்கூறுகள்: 17°0′N 96°10′E | |
மியான்மரின் மாநிலம் | கீழ் மியான்மர் |
தலைநகரம் | யங்கோன் |
அரசு | |
• Legislature | Yangon Region Hluttaw |
பரப்பளவு | |
• மொத்தம் | 10,276.7 km2 (3,967.9 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | பரப்பளவின்படி மியான்மரின் நிர்வாகப் பிரிவுகளுள் 14 ஆவது நிலை |
மக்கள்தொகை (2014 மக்கட்தொகை)[1] | |
• மொத்தம் | 73,60,703 |
• தரவரிசை | 1st |
• அடர்த்தி | 720/km2 (1,900/sq mi) |
வகைப்பாடு | |
• இனக்குழுக்கள் | பாமர், காரென், ராகைன், சீனர்கள், இந்தியர்கள், மான் |
• சமயம் | பௌத்தம், கிறிஸ்தவம், இந்து சமயம், இசுலாம் |
நேர வலயம் | ஒசநே+06:30 (MST) |
ஐஎசுஓ 3166 குறியீடு | MM-06 |
எழுத்தறிவு விகிதம் (2014) | 96.6%[2] |
இணையதளம் | eyangon |
மூடு
யங்கோன் மாநிலத்தின் தலைநகரமான யங்கோன் நகரம் முன்னாள் தேசிய தலைநகரமாகவும், நாட்டின் மிகப்பெரிய நகரமாகவும் உள்ளது. நாட்டின் மிக நன்கு வளர்ச்சியடைந்த பகுதியாகவும் பிரதான சர்வதேச நுழைவாயிலாகவும் உள்ளது. இந்த மாநிலத்தின் பரப்பளவு 10,170 கிமீ (3,930 சதுர மைல்). 10,170 km2 (3,930 sq mi).[3]