![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Mary_Kom_-_British_High_Commission%252C_Delhi%252C_27_July_2011.jpg/640px-Mary_Kom_-_British_High_Commission%252C_Delhi%252C_27_July_2011.jpg&w=640&q=50)
மேரி கோம்
குத்துச்சண்டை வீரர் / From Wikipedia, the free encyclopedia
மேரி கோம் (Mary Kom(இயற்பெயர்: மேன்க்டே சன்ங்நேஜாங்க மேரி கோம் (Mangte Chungneijang Mary Kom; பிறப்பு: 24 நவம்பர், 1982[1]),இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். 2020ஆம் ஆண்டு பத்ம விபூசண் விருதினைப் பெற்றார்.
![]() 2011 இல் இந்தியாவிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் மேரி கோம் பேசிய போது. | |
புள்ளிவிபரம் | |
---|---|
பிரிவு | 54 கிலோகிராம்கள் (119 lb) |
உயரம் | 158.49 cm (5 அடி 2.40 அங்) |
தேசியம் | இந்தியர் |
பிறப்பு | 1 மார்ச்சு 1983 (1983-03-01) (அகவை 41) |
பிறந்த இடம் | கங்காதேய், சிசிபூர் வட்டம், மணிப்பூர், இந்தியா |
சுய விபரம் | |
வாழ்க்கைத் துணை | கருங் ஓங்கோலர் கோம் |
இவர் உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக 5 முறை தங்கப்பதக்கம் வென்ற முதலாவது இந்தியாவின் வீராங்கனை ஆவார். 2012 லண்டன் கோடை கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தெரிவு செய்யப்பட்ட இந்தியாவின் ஒரேயொரு குத்துச்சண்டை வீராங்கனை இவராவார். இதில் 51 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.[2]. AIBA (சர்வதேச குத்துச்சண்டை அமையம்) இன் தரப்படுத்தலில் இவர் உலகப் பெண் குத்துச்சண்டை வீரர்களில் 4 ஆவது இடத்தில் காணப்படுகிறார்.[3] 2013 ஆம் ஆண்டில் தனது சுயசரிதையை வெளியிட்ட மேரி கோம் , ‘அன்பிரேக்கபிள்’ (unbreakable) என்று அதைப் பெயரிட்டுள்ளார்.[4] இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்[5][6].