![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/16/Mes_Aynak_Jerome_Starkey.jpg/640px-Mes_Aynak_Jerome_Starkey.jpg&w=640&q=50)
மெஸ் ஐநாக்
From Wikipedia, the free encyclopedia
மெஸ் ஐநாக் (Mes Aynak), ஆப்கானித்தான் நாட்டின் தலைநகர் காபூல் நகரத்தின் தென்கிழக்கில் 40 கிமீ தொலைவில் மலைப் பள்ளத்தாக்கில் உள்ளது. இப்பகுதி லோகார் மாகாணத்தின் முகமது ஆகா மாவட்ட மலைப்பகுதியில் 2120 மீட்டர் உயரத்தில் உள்ளது.
மெஸ் ஐநாக்
مس عينک | |
---|---|
![]() மெஸ் ஐநாக் விகாரைகளின் சிதிலமடைந்த காட்சிகள் | |
ஆள்கூறுகள்: 34°24′N 69°22′E | |
நாடு | ஆப்கானித்தான் |
மாகாணம் | லோகார் மாகாணம் |
மாவட்டம் | முகமது ஆகா மாவட்டம் |
ஏற்றம் | 2,120 மீ m (6,958 அடி ft) |
இப்பகுதியில் பெருமளவில் செப்பு கனிம வளம் நிறைந்துள்ளது. மேலும் பட்டுப் பாதையில் அமைந்த மெஸ் ஐநாக், குசான் பேரரசு (கிபி 30 – 375) காலத்தில், பௌத்தம் இப்பகுதியில் நன்கு பரவியிருந்தது. மெஸ் ஐநாக் மலைப்பகுதியில் 400க்கும் மேற்பட்ட பௌத்த தொல்பொருட்களும், கௌதம புத்தர் சிலையும், தூபிகளும், 100 ஏக்கர் பரப்பளவில் பௌத்த விகாரை வளாகம் ஒன்றைச் சிதைந்த நிலையில் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [1]
கிபி 5 - 7ம் நூற்றாண்டு வரை செழிப்பின் உச்சத்தில் இருந்த மெஸ் ஐநாக் பகுதி, சிறிது சிறிதாகச் செழிப்பு குன்றியது. எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மெஸ் ஐநாக் பகுதியில் பௌத்தம் அழிக்கப்பட்டு, இசுலாம் வளர்க்கப்பட்டது. [2]