From Wikipedia, the free encyclopedia
மெக்சிக்கோ தேசிய காற்பந்து அணி பன்னாட்டு காற்பந்தாட்டங்களில் மெக்சிக்கோவின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை மெக்சிக்கோவில் காற்பந்தாட்டங்களை ஒழுங்குபடுத்தும் மெக்சிக்கோ காற்பந்துக் கூட்டமைப்பு (FMF) நிர்வகிக்கிறது. மெக்சிக்கோ அணியின் தாயக விளையாட்டரங்கமாக எசுடேடியோ அசுடெக்கா உள்ளது. தலைமைப் பயிற்றுனராக மிகுயில் எர்ரெரா பணியாற்றுகிறார். பிஃபா உலகத் தரவரிசையில் தற்போது 20வது இடத்தில் உள்ளது.[2] உலக காற்பந்து எலோ தரவரிசையில் 22வதாக உள்ளது.[3]
அடைபெயர் | எல் டிரைகலர் எல் டிரை லா வெர்டெ | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கூட்டமைப்பு | மெக்சிக்கோ காற்பந்துக் கூட்டமைப்பு | ||||||||||
மண்டல கூட்டமைப்பு | வட அமெரிக்க காற்பந்து ஒன்றியம் (NAFU) (வட அமெரிக்கா) | ||||||||||
கண்ட கூட்டமைப்பு | வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு | ||||||||||
தலைமைப் பயிற்சியாளர் | மிகுயில் எர்ரெரா | ||||||||||
அணித் தலைவர் | இராபீயில் மார்குயிசு | ||||||||||
Most caps | கிளாடியோ சுயாரெசு (178) | ||||||||||
அதிகபட்ச கோல் அடித்தவர் | ஜாரெட் போர்கெட்டி (46) | ||||||||||
தன்னக விளையாட்டரங்கம் | எசுடேடியோ அசுடெக்கா | ||||||||||
பீஃபா குறியீடு | MEX | ||||||||||
பீஃபா தரவரிசை | 20 | ||||||||||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 4 (பெப்ரவரி–சூன் 1998, மே–சூன் 2006) | ||||||||||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 33 (சூலை 2009) | ||||||||||
எலோ தரவரிசை | 22 | ||||||||||
அதிகபட்ச எலோ | 5 (சூலை 2011) | ||||||||||
குறைந்தபட்ச எலோ | 47 (பெப்ரவரி 1979) | ||||||||||
| |||||||||||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||||||||||
குவாத்தமாலா 2–3 மெக்சிக்கோ (குவாத்தமாலா; 1 சனவரி 1923) | |||||||||||
பெரும் வெற்றி | |||||||||||
மெக்சிக்கோ 13–0 பஹமாஸ் (டோலுக்கா, மெக்சிக்கோ; ஏப் 28, 1987) | |||||||||||
பெரும் தோல்வி | |||||||||||
இங்கிலாந்து 8–0 மெக்சிக்கோ (இலண்டன், இங்கிலாந்து; மே 10, 1961) | |||||||||||
உலகக் கோப்பை | |||||||||||
பங்கேற்புகள் | 14 (முதற்தடவையாக 1930 இல்) | ||||||||||
சிறந்த முடிவு | கால் இறுதி, 1970, 1986 | ||||||||||
கான்காகேஃப் தங்கக் கோப்பை | |||||||||||
பங்கேற்புகள் | 20 (முதற்தடவையாக 1963 இல்) | ||||||||||
சிறந்த முடிவு | வாகையர், 1965,1971,1977,1993,1996,1998,2003, 2009, 2011 | ||||||||||
கோபா அமெரிக்கா | |||||||||||
பங்கேற்புகள் | 8 (முதற்தடவையாக 1993 இல்) | ||||||||||
சிறந்த முடிவு | 2வது இடம், 1993, 2001 | ||||||||||
கூட்டமைப்புகள் கோப்பை | |||||||||||
பங்கேற்புகள் | 6 (முதற்தடவையாக 1995 இல்) | ||||||||||
சிறந்த முடிவு | வாகையர், 1999 | ||||||||||
Honours
|
மெக்சிக்கோ பதினான்கு உலகக்கோப்பைகளில் தகுதிபெற்றுள்ளது; 1994ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து தகுதிபெற்று வந்துள்ளது. மெக்சிக்கோ முதல் உலகக்கோப்பையின் சூலை 13, 1930 அன்று ஆடப்பட்ட முதல் ஆட்டத்திலேயே பிரான்சுடன் விளையாடியுள்ளது. இந்த அணியின் சிறந்த வெளிப்பாடாக மெக்சிக்கோவில் நடத்தப்பட்ட இரு உலகக்கோப்பைகளிலும், 1970, 1980, காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு மண்டலத்தின் வரலாற்றில் மிகவும் சிறந்த தேசிய அணியாக விளங்குகிறது. இந்த மண்டலத்திலிருந்து ஃபிஃபா அங்கீகரித்த கோப்பை ஒன்றை வென்ற ஒரே அணியாக மெக்சிக்கோ விளங்குகிறது. பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியில் ஒருமுறையும் வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு போட்டிகளில் ஒன்பது முறையும் வென்றுள்ளது.
மெக்சிக்கோ வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பில் இருந்தாலும் கோபா அமெரிக்காவில் விளையாட அழைக்கப்படுகிறது. இந்தப் போட்டிகளில் இருமுறை இரண்டாமிடத்திற்கும் மூன்று முறை மூன்றாமிடத்திற்கும் பதக்கம் வென்றுள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.