கனடாவில் பாயும் ஆறு From Wikipedia, the free encyclopedia
மெக்கன்சி ஆறு (Mackenzie River, ஸ்லாவெ மொழி : Deh-Cho } [tèh tʃʰò], அதாவது பெரிய ஆறு; Inuvialuktun : Kuukpak [kuːkpɑk] உண்மையில் பெரிய நதி; பிரஞ்சு: Fleuve (de) Mackenzie ) என்பது கனேடிய போரியல் காட்டில் உள்ள ஒரு ஆறு ஆகும். இது கனடாவின் மிக நீளமான ஆற்று அமைப்பாகும், மேலும் இது மிசிசிப்பி ஆற்றுக்கு அடுத்து வட அமெரிக்க ஆறுகளில் இரண்டாவது பெரிய வடிநில படுகையை கொண்ட ஆறாகும். மெக்கன்சி ஆறானது கனடாவின் வடமேற்கு நிலப்பகுதிகளுக்குள் ஒரு அகன்ற, மெல்லிய மக்கள்தொகை கொண்ட காடு மற்றும் தூந்திரப் பகுதி வழியாக பாய்கிறது, இருப்பினும் இதன் பல துணை ஆறுகள் மற்ற ஐந்து கனேடிய மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு சென்றடைகின்றன. ஆற்றின் பிரதான பகுதியானது 1,738 கிலோமீட்டர்கள் (1,080 mi) நீளம் கொண்டது. இது சிலாவியப் பேரேரியிலிருந்து ஆர்க்டிக் பெருங்கடலில் வடக்கு-வடமேற்கில் பாய்கிறது, அங்கு அதன் முகத்துவாரத்தில் ஒரு பெரிய ஆற்று முகத்துவாரத்தை உருவாக்குகிறது. அதன் பரந்த அளவிலான வடிகால் பரப்பானது கனடாவின் சுமார் 20 விழுக்காடு பகுதிகளில் பாய்கிறது. [1] இது வட அமெரிக்காவிலிருந்து ஆர்க்டிக்கில் பாயும் மிகப்பெரிய ஆறாகும், மேலும் அதன் துணை ஆறுகளூயும் சேர்த்து இதன் மொத்த நீளம் 4,241 கிலோமீட்டர்கள் (2,635 mi) ஆகும். இது உலகின் பதின்மூன்றாவது மிக நீளமான ஆற்று அமைப்பாக உள்ளது . [2]
மெக்கன்சி ஆற்றின் இறுதி மூலமாக பிரிட்டிசு கொலம்பியாவின் வடக்கு உட்புறத்தில் உள்ள துட்டேட் ஏரி உள்ளது. 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவிலிருந்து வட அமெரிக்காவிற்கு நடந்த துவக்ககால மனித இடம்பெயர்வின் போது வரலாற்றுக்கு முந்தைய மக்கள் மேற்கொண்ட பாதை மெக்கன்சி பள்ளத்தாக்கு என்று நம்பப்படுகிறது. இனுவியலுவிட், குவிசின் மற்றும் பிற பூர்வீக மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த ஆற்றின் ஊடாக வாழ்ந்தார். துவக்க்கால ஐரோப்பிய ஆய்வாளர்கள் கனடாவின் வடக்கு உள்பகுதியை ஆராய முக்கிய பாதையாக இந்த ஆறு இருந்தது.
பொருளாதார வளர்ச்சியானது ஆற்றின் நெடுக மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் போது, விலங்கின் மென்மயிர் வணிகம் ஒரு இலாபகரமான வணிகமாக மாறியது, ஆனால் இது கடுமையான வானிலை காரணமாக பாதிக்கப்பட்டது. 1920 களில் நார்மன் வெல்ஸில் எண்ணெய் வயலின் கண்டுபிடிப்பானது மெக்கன்சி பள்ளத்தாக்கில் தொழில்மயமாக்கல் காலக்கட்டம் தோன்ற காரணமாக ஆனது. வடிநிலத்தின் கிழக்கு மற்றும் தெற்கு விளிம்புகளில் உலோக தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன; இவற்றில் யுரேனியம், தங்கம், ஈயம், துத்தநாகம் போன்றவை அடங்கும். தெற்கில், குறிப்பாக அமைதி ஆற்றுப பகுதியில் வேளாண்மை நிலவுகிறது. ஆற்றின் நீர்ப்பகுதியியில் நீர் மின் ஆற்றல், வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப்பாசனம் போன்ற தேவைகளுக்காக ஆற்றின் பல்வேறு அணைகள், துணை ஆறுகள் போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன.
இதன் பல துணை ஆறுகளால், மெக்கன்சி ஆற்றுப் படுகையானது ஐந்து கனேடிய மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களின் பகுதிகளான பிரிட்டிசு கொலம்பியா , ஆல்பர்ட்டா, சஸ்காச்சுவான், யூக்கான் , வடமேற்கு பிரதேசங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக உள்ளது. [3] பிரிட்டிசு கொலம்பியாவின் வடக்கு உட்புறத்தில் உள்ள துட்டேட் ஏரி, ஃபின்லே - அமைதி ஆற்று பாதை வழியாக மெக்கன்சி ஆற்றின் முதன்மையான மூலமாகும். இது பிரிட்டிசு கொலம்பியா மற்றும் ஆல்பர்ட்டா வழியாக 1,923 கிலோமீட்டர் (1,195 மைல்) வரை நீண்டுள்ளது. 1,231 கிலோமீட்டர் (765 மைல்) நீள அதபாஸ்கா ஆறானது மேலும் தெற்கே ஆல்பர்ட்டாவில் உள்ள ஜாஸ்பர் தேசிய பூங்காவில் உருவாகிறது. அமைதி ஆறு மற்றும் அதாபாஸ்கா ஆறு போன்றவை ஒன்றாக இணைந்து ராக்கி மலைத்தொடர் மற்றும் மத்திய ஆல்பர்ட்டா புல்வெளிகளின் கிழக்கு சரிவின் குறிப்பிடத்தக்க பகுதியில் பாய்கின்றன. அமைதி ஆறு பெரும்பான்மையான நீரை அளிப்பதாக உள்ளது, ஆண்டுக்கு சுமார் 66 கிமீ 3 (54 மில்லியன் ஏக்கர் அடி ), [4] மற்றும் அதாபாஸ்கா ஆறானது 25 கிமீ 3 (20 மில்லியன் ஏக்கர் அடி) நீரை வழங்குகிறது. [5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.