மூவிணைய பியூட்டைல் ஐசோசயனைடு
From Wikipedia, the free encyclopedia
மூவிணைய பியூட்டைல் ஐசோசயனைடு (tert-Butyl isocyanide)என்பது Me3CNC (Me = மெதில், CH3) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கரிமச் சேர்மம் ஆகும். C≡N-R என்ற வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் வினைசெயல் தொகுதியைக் கொண்டு கார்பைலமீன் அல்லது ஐசோநைட்ரைல் என அழைக்கப்படும் ஐசோ சயனைடாகும். மூவிணைய பியூட்டைல் ஐசோசயனைடு மற்ற அல்கைல் சயனைடுகளைப் போல், வினைத்திறன் மிக்க, நிறமற்ற, மிகவும் துர்நாற்றமுடைய ஒரு திரவமாகும். இது தாண்டல் உலோகங்களுடன் உலோக-கார்பன் வேதியியற் பிணைப்புகளில் ஈடுபட்டு நிலைத்தன்மையுடைய அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது.[1]
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-ஐசோசயனோ-2-மெதில்புரோப்பேன் | |||
வேறு பெயர்கள்
t-BuNC | |||
இனங்காட்டிகள் | |||
7188-38-7 Y | |||
ChemSpider | 22045 Y | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 23577 | ||
| |||
பண்புகள் | |||
C5H9N | |||
வாய்ப்பாட்டு எடை | 83.13 கி/மோல் | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
அடர்த்தி | 0.735 கி/செமீ3, திரவம் | ||
கொதிநிலை | 91 °C (196 °F; 364 K) | ||
பொருந்தாது | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூவிணைய பியூட்டைல் ஐசோசயனைடானது ஆஃப்மன் கார்பைலமீன் வினையின் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த மாற்றத்தில், ஒரு டைக்குளோரோமீத்தேனில் கரைக்கப்பட்ட மூவிணைய பியூட்டைலமீனானது குளோரோஃபார்ம் மற்றும் நீரிய சோடியம் ஐதராக்சைடுடன் நிலைமாற்ற வினையூக்கியான பென்சைல்டிரைஎதில்அம்மோனியம் குளோரைடு முன்னிலையில் வினைபட்டு விளைபொருளானது கிடைக்கிறது.[2]
- Me3CNH2 + CHCl3 + 3 NaOH → Me3CNC + 3 NaCl + 3 H2O
மூவிணைய பியூட்டைல் ஐசோசயனைடானது மூவிணைய பியூட்டைல் சயனைடு என அழைக்கப்படும் பைவாலோநைட்ரைல் உடன் மாற்றியத்தைக் கொண்டுள்ளது. நைட்ரைல்கள் கார்பைலமீன் தொடரின் ஒத்த உறுப்புடன் கொண்டுள்ள வேறுபாடானது, CN வேதி வினைக்குழுவானது தாய் சேர்மத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிணைப்பானது கார்பன் மூலமானதாக அல்லாமல் நைட்ரசன் மூலமானதாக இருக்கும்.