![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e9/Murex_pecten_shell_3.jpg/640px-Murex_pecten_shell_3.jpg&w=640&q=50)
முரெக்சு
From Wikipedia, the free encyclopedia
முரெக்சு (Murex) என்பது நடுத்தர முதல் பெரிய அளவிலான இரைகெளவல் வெப்பமண்டல கடல் நத்தைகளின் பேரினமாகும். இவை ஊனுண்ணி பெருங்கடல் வயிற்றுக்காலி மெல்லுடலிகளாகும். இவை முரிசிடே குடும்பத்தினைச் சார்ந்தவை. பொதுவாக இவை ”முரெக்சு” என்றும் "பாறை நத்தை" என்றும் அழைக்கப்படுகின்றன.[1]
முரெக்சு புதைப்படிவ காலம்:கிரீத்தேசியக் காலம் - அண்மை | |
---|---|
![]() | |
வீனசு சீப்பு முரெக்சு, முரெக்சு பெக்டன் பக்கவாட்டு காட்சி, பக்கத்தின் முன்புறம் முன்புற முனை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | நியோகேசுட்ரோபோட்டா |
குடும்பம்: | மூரிசிடே |
பேரினம்: | முரெக்சு |
சிற்றினம் | |
உரையினைப் பார்க்கவும் | |
வேறு பெயர்கள் [1] | |
|
பொதுவான பெயரான முரெக்சு என்பது முரிசிடே குடும்பத்தில் உள்ள பல சிற்றினங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. முரிசிடே குடும்பத்தில் முதலில் இலத்தீன் பொதுவான பேரினப் பெயர் முரெக்சு என்று வழங்கப்பட்டது. ஆனால் வெவ்வேறு புதிய பேரினப் பெயர் பின்னர் வழங்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டன.
முரெக்சு என்ற சொல்லானது அரிசுடாட்டிலால் இந்த பேரின நத்தைகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. எனவே அறிவியல் சமூகத்தால் இன்னும் பழமையான கடல் நத்தைகளுக்குப் பயன்படுத்தப்படும் பெயராக இது உள்ளது.