முத்துத் தோட்டுடனான சிறுமி (ஓவியம்)
From Wikipedia, the free encyclopedia
முத்துத் தோட்டுடனான சிறுமி (Girl with a Pearl Earring, டச்சு: Het Meisje met de Parel) நெதர்லாந்தைச் சேர்ந்த ஓவியரான ஜொஹான்னெஸ் வெர்மீர் என்பவரின் மிகச் சிறந்த ஓவியங்களுள் ஒன்று. இதன் பெயர் குறிப்பதுபோலவே இவர் ஒரு முத்துத் தோட்டை ஒரு குவியப்புள்ளியாகப் பயன்படுத்தியுள்ளார். இந்த ஓவியம் தற்போது, ஹேக் நகரில் உள்ள மோரித்சுயிஸ் எனப்படும் அருங்காட்சியகத்தில் உள்ளது. இது சில வேளைகளில், "வடக்கின் மோனா லிசா" அல்லது "டச்சு மோனா லிசா" (the Dutch Mona Lisa) என அழைக்கப்படுகிறது. [1]
விரைவான உண்மைகள்
முத்துத் தோட்டுடனான பெண் |
ஜொஹான்னெஸ் வெர்மீர், ~1665 |
கான்வஸில் எண்ணெய் வண்ணம் |
44.5 × 39 cm |
மோரித்சுயிஸ், ஹேக் நகர் |
மூடு