பாரதிராஜா இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
முதல் மரியாதை (1985) ஆம் ஆண்டு[1] வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி, இரஞ்சனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
முதல் மரியாதை | |
---|---|
இயக்கம் | பாரதிராஜா |
தயாரிப்பு | பாரதிராஜா |
கதை | ஆர். செல்வராஜ் |
திரைக்கதை | பாரதிராஜா |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிவாஜி கணேசன் ராதா சத்யராஜ் வடிவுக்கரசி தீபன் இரஞ்சனி ஜனகராஜ் ஏ.கே.வீராச்சாமி |
ஒளிப்பதிவு | கண்ணன் |
படத்தொகுப்பு | ராஜகோபால், மோகன் ராஜ் |
வெளியீடு | 1985 |
ஓட்டம் | 160 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
கிராமப்படம் / கலைப்படம் வண்ணப்படம்
அறம் பிழன்ற பெண்ணைத் தன் உறவினரின் மானம் காக்க மணம் புரிந்துகொண்டாலும், தன் மனைவியால் எப்போதும் நிந்திக்கப்பட்டு வரும் மனிதர். ஊருக்குப் புதிதாக வரும் தன் மகளின் வயதுடைய பெண்மேல் காதல் கொள்கின்றார். அவர்மேல் காதல் கொள்ளும் அறிவார்ந்த அப்பெண்ணும் ஊராரின் வசவுகளை ஏற்று அவருடைய குடும்ப மானம் காக்கக் கொலை செய்து சிறை செல்கின்றாள். அவளுக்கு இழுக்கு வராவண்ணம் அப்பெண்ணின் வீட்டிலேயே வாழ்ந்து தன் இறுதிக்காலத்தில் அவளை மீண்டும் கண்டபின் உயிர் துறக்கின்றார். அன்றில் பறவையைப் போல் அப்பெண்ணும் உயிர் துறக்கின்றார்.
இந்தப் படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை இளையராஜா செய்திருந்தார். அனைத்துப் பாடல் வரிகளையும் வைரமுத்து இயற்றியிருந்தார். இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே புகழ்பெற்று படத்தின் வெற்றிக்குத் துணைபுரிந்தன.
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நேரம் |
---|---|---|---|---|
1 | "அந்த நிலாவத்தான்" | இளையராஜா, சித்ரா | வைரமுத்து | 4:31 |
2 | "பூங்காற்று திரும்புமா" | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | வைரமுத்து | 4:52 |
3 | "வெட்டிவேரு வாசம்" | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | வைரமுத்து | 4:28 |
4 | "ஏ குருவி" | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | வைரமுத்து | 1:16 |
5 | "ராசாவே உன்ன நம்பி" | எஸ். ஜானகி | வைரமுத்து | 4:32 |
6 | "ஏ கிளியிருக்கு" | இளையராஜா | வைரமுத்து | 1:08 |
7 | "ஏறாத மலை மேல" | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | வைரமுத்து | 2:08 |
8 | "நான் தானே அந்தக்குயில்" | எஸ். ஜானகி | வைரமுத்து | 0:28 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.