முங்கேர் வானுர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
முங்கேர் வானுர்தி நிலையம் (Munger Airport), சபியாபாத் வானூர்தி நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது.[1] இந்த வானூர்தி நிலையம் இந்திய மாநிலமான பீகாரில் முங்கேர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2] மாவட்ட தலைநகர் முங்கேரிலிருந்து 5 கி.மி. தொலைவில் சபியாபாத்தில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது.[3] இந்த விமான நிலையம் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணைய கட்டுப்பாட்டில் உள்ளது.
முங்கேர் வானுர்தி நிலையம் Munger Airport | |
---|---|
சுருக்கமான விபரம் | |
வானூர்தி நிலைய வகை | பொது |
உரிமையாளர் | பீகார் அரசு |
சேவை புரிவது | முங்கேர் |
அமைவிடம் | முங்கேர், பீகார், இந்தியா |
ஆள்கூறுகள் | 25°20′47″N 086°28′59″E |
நிலப்படம் | |
முங்கேர் விமான நிலையம் 90 ஆண்டுகள் பழமையான நிலையமாகும்.[2] 2015 ஜனவரியில், அப்போதைய மாநில முதல்வராக இருந்த ஜீதன் ராம் மாஞ்சி விமான நிலையத்தை மேம்பாடு செய்து உள்நாட்டு விமானச் சேவையினை தொடங்க அறிவித்தார்.[1] மார்ச் 2015இல், பீகார் ராஜ்ய பவன் நிமான் நிகாமுக்கு விமான நிலைய சீரமைப்பு பணிகள் வழங்கப்பட்டன. விமான நிலையம் 8 கோடி செலவில் சீரமைப்பு செய்யப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் ஓடுபாதையை முதலமைச்சர் நிதீஷ் குமார் 24 மே 2016 அன்று பயன்பாட்டிற்குத் துவக்கி வைத்தார்.[4][5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.