முகம்மது அலியின் பள்ளிவாசல்
எகிப்தில் உள்ள மசூதி / From Wikipedia, the free encyclopedia
முகமது அலி பாஷாவின் பெரிய பள்ளிவாசல் (Great Mosque of Muhammad Ali Pasha) அல்லது அலபாசுடர் பள்ளிவாசல் என்பது எகிப்தில் கெய்ரோவின் கோட்டையில் அமைந்துள்ள ஒரு பள்ளிவாசலாகும். இது 1830 மற்றும் 1848க்குமிடையில் கட்டப்பட்டது.
முகம்மது அலியின் பள்ளிவாசல் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | கெய்ரோ, எகிப்து |
புவியியல் ஆள்கூறுகள் | 30.028611°N 31.259722°E / 30.028611; 31.259722 |
சமயம் | இசுலாம் |
தலைமை | எகிப்தின் முகமது அலி |
கோட்டையின் உச்சியில் அமைந்துள்ள இந்த உதுமானிய பள்ளிவாசம், 19 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் கட்டப்பட்ட மிகப்பெரிய ஒன்றாகும். அதன் நிழலும், இரட்டை மினாரெட்டுகளும், கெய்ரோவின் அனைத்து பகுதியிலிருந்தும் நன்கு தெரியுமாறு கட்டப்பட்டுள்ளது.
1816 இல் இறந்த முகம்மது அலியின் மூத்த மகனான துசுன் பாஷாவின் நினைவாக இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டது.
இந்த பள்ளிவாசல், கோட்டையுடன் சேர்ந்து, கெய்ரோவின் முக்கிய அடையாளங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். மேலும் எந்த திசையிலிருந்தும் நகரத்தை நெருங்கும் போது காணக்கூடிய முதல் அம்சங்களில் இதுவும் ஒன்றாகும்.