மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள்
From Wikipedia, the free encyclopedia
மியான்மார் இருபத்தி ஒன்று (21) நிர்வாக துணைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:
வகை | பர்மிய மொழிப்பெயர் | பிரிவுகளின் எண்ணிக்கை# | |
---|---|---|---|
மாநிலம் | ပြည်နယ် | IPA:pjìnɛ̀ | 7 |
பிரதேசம் | တိုင်းဒေသကြီး | IPA:táɪɴ dèθa̰ dʑí | 7 |
யூனியன் பிரதேசம் | ပြည်တောင်စုနယ်မြေ | IPA:pjìdàʊɴzṵnɛ̀mjè | 1 |
சுய-நிர்வாக மண்டலம் | ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ | IPA:kòbàɪɴ ʔoʊʔtɕʰoʊʔ kʰwɪ̰ɴja̰ dèθa̰ | 5 |
சுய-நிர்வாகப் பிரிவு | ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရ တိုင်း | IPA:kòbàɪɴ ʔoʊʔtɕʰoʊʔ kʰwɪ̰ɴja̰ táɪ | 1 |
மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள் | |
---|---|
வகை | நாடு |
அமைவிடம் | மியான்மர் |
எண்ணிக்கை | 7 பிரதேசங்கள், 7 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசம், 6 சுய-நிர்வாக மண்டலங்கள் (as of 2015) |
மக்கள்தொகை | 286,627 (காயா மாநிலம்) - 7,360,703 (யங்கோன் பிரதேசம்) |
பரப்புகள் | 7,054 km2 (2,724 sq mi) (நைப்பியிதோ யூனியன் பிரதேசம்) - 155,801 km2 (60,155 sq mi) (ஷான் மாநிலம்) |
அரசு | மியான்மர் அரசாங்கம் |
உட்பிரிவுகள் | மாவட்டம் நகர் வார்டு மற்றும் கிராமம் கிராமம் |
2010 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்திற்கு முன்னர் தற்போதைய பிரதேசங்கள் (மண்டலங்கள்) பிரிவுகள் என அழைக்கப்பட்டன. [1] அவைகளில் ஐந்து மண்டலங்களின் பெயர்கள் அவற்றின் தலைநகரின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன இதில் ஐராவதி பிரதேசம் மற்றும் [[தாநின்தாரி பிரதேசம்] ஆகியவை] விதிவிலக்காகும். பிரதேசங்கள் அனைத்திலும் பர்மிய இன மக்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் அவர்களே அந்தப் பிரதேசம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மாநிலம், மண்டலம் மற்றும் வா பிரிவுப் பகுதிகளில் சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
யங்கோன் பிரதேசம் மற்ற பிரதேசங்களை விட மிகப்பெரிய மக்கட்தொகையை கொண்டிருக்கிறது; மற்றும் மிகவும் அடர்த்தியான மக்கட்தொகையும் இங்குதான் உள்ளது. மிகக் குறைந்த மக்கட்தொகை கொண்ட மாநிலம் காயா மாநிலம். நிலப்பரப்பளவில் ஷான் மாநிலம் மிகப் பெரியது மற்றும் யங்கோன் பிரதேசம் மிகச் சிறியதாகும்.