மித்தி
பாக்கித்தானின் சிந்து மாகாணத்தில் இடம்பெற்றுள்ள தார்பார்க்கர் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். / From Wikipedia, the free encyclopedia
மித்தி (Mithi) என்பது பாக்கித்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் இடம்பெற்றுள்ள தார்பார்க்கர் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். மிர்பூர் காசிலிருந்து 1990 ஆம் ஆண்டு தார்பார்க்கர் மாவட்டம் பிரிக்கப்பட்ட போது மித்தி மாவட்டத் தலைநகரமாக மாறியது [2]. இசுலாமியர்கள் பெரும்பான்மை அமையாத பாக்கித்தானிய நகரங்கள் சிலவற்றில் மித்தி நகரமும் ஒன்றாகும். இந்நகர மக்கள் தொகையில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்து சமூகத்திற்கு சொந்தமானவர்கள் ஆவர். இந்துக்கள், இசுலாமியர்கள் இருவருமே இந்நகரில் அமைதியான முறையில் வாழ்கை நடத்துகின்றனர். இந்நகரின் குற்ற விகிதமும் குறைவான அளவிலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது [3].
மித்தி
Mithi مٺي مِٹّھی | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 24°44′24″N 69°48′0″E | |
நாடு | பாக்கித்தான் |
Province | சிந்து |
District | தார்பார்க்கர் |
ஏற்றம் | 42 m (138 ft) |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 1,50,000 (நகரில் மட்டும்)[1] |
• மதிப்பீடு () | 1,50,000 இற்கும் மேல் |
நேர வலயம் | ஒசநே+5 (பாக்கித்தான் சீர் நேரம்) |
இந்தோ-ஐரோப்பிய மொழி குடும்பத்தின் இந்தோ-ஆரியக் கிளையிலுள்ள ராசத்தானி மொழிகளில் ஒன்றான தாட்கி மொழி தார்பார்க்கர் மாவட்டத்தில் பேசப்படும் உள்ளூர் மொழியாகும். மார்வாரி சிந்தி மொழிக்கு மிக நெருக்கமாக உள்ள தாட்கி மொழியை உருது மற்றும் பஞ்சாபி பேசும் குடிமக்களும் புரிந்து கொள்கிறார்கள்.