![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/00/Montage_of_Ming%25C9%2599%25C3%25A7evir_2019.jpg/640px-Montage_of_Ming%25C9%2599%25C3%25A7evir_2019.jpg&w=640&q=50)
மிங்கசேவிர் நகரம்
From Wikipedia, the free encyclopedia
மிங்கசேவிர் (Mingachevir) ((listen)ⓘ) என்பது அசர்பைஜானில் நான்காவது பெரிய நகரமாகும். இது சுமார் 104,500 மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. குர் ஆற்றின் நீர்மின் நிலையம் காரணமாக இது 'நகரங்களின் விளக்குகள்' என அழைக்கப்படுகிறது
மிங்கசேவிர் நகரம் | |
---|---|
குடியரசின் துணை நகரம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 40°46′12″N 47°02′56″E | |
நாடு | ![]() |
நகரம் | மிங்கசேவிர் நகரம் |
நிறுவப்பட்டது | 1946 |
பரப்பளவு | |
• மொத்தம் | 47 km2 (18 sq mi) |
ஏற்றம் | 545 m (1,788 ft) |
மக்கள்தொகை (01.01.2020)[1] | |
• மொத்தம் | 1,06,048 |
• அடர்த்தி | 2,300/km2 (5,800/sq mi) |
நேர வலயம் | ஒசநே+4 |
இடக் குறியீடு | +994 024 27 |
இணையதளம் | Official website |
இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக குடியேற்றம் நடந்துள்ளது, ஆனால் தற்போதைய நகரம் 1948 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது கைதிகளாக்கப்பட்ட ஜெர்மன் வீரர்களால் நகரம் நிர்மானிக்கப்பட்டது. இந்த நகரம் மிங்கசேவிர் தொழில்நுட்பக் கழகத்தையும் கொண்டுள்ளது. நகரம் அசர்பைஜானின் நிர்வாகப் பிரிவை உருவாக்குகிறது. இந்த மாவட்டம் தலைநகரம் பக்கூவிலிருந்து 323 கி.மீ தொலைவிலும், பக்கூ-திபிலிசி இருப்புப்பாதையிலிருந்து 17 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. புவியியல் ரீதியாக, இப்பகுதி குர் ஆற்றின் இருபுறமும் குடியரசின் மையத்தில் அமைந்துள்ளது. [2]