மிகச்சிறிய மீன்கள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
உலகின் மிகச்சிறிய மீன்கள் (List of smallest fish) அவற்றின் அளவினைப் பயன்படுத்திப் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]
முதிர்ச்சியடைந்த மீன்களின் குறைந்தபட்ச நிலையான நீளத்தின் அடிப்படையில் சில மீன்கள் பட்டியலிடப்பட்டன. அவற்றில் இந்தோனேசிய மீச்சிறு கெண்டை பேடோசிப்ரிஸ் புரோஜெனெடிகா பெண் மீன் 7.9 mm (0.31 அங்) நீளமுடையது.[2][3][4] தடித்த குழந்தை மீன் (சிண்டிலேரியா ப்ரெவிபிங்குயிசு) பெண் மீன் 7 mm (0.28 அங்) நீளமும் ஆண் மீன் 6.5 mm (0.26 அங்) நீளமும் உடையன.[1] போட்டோகாரினசு செபைனிசெப்சு ஆண் 6.2 mm (0.24 அங்) நீளம் வரை வளரக்கூடியது[5][6] சிறிய இனத்தின் பெரும்பான்மையான அதிகபட்ச அளவு (பெரும்பாலும் மீன்களில் பயன்படுத்தப்படும் ஒரு அளவீடு), அடிப்படையில் பெடோசைப்ரிசு புரோகெனெடிகா, குள்ள பிக்மி கோபி (பாண்டகா பிக்மேயே), சின்ன குள்ள கோபி (டிரைமோடாம் நானசு) மற்றும் தடித்த சிசுமீன் (சிண்டேலிரியா பிரேவிபின்குயிசு) முதலியன 11 mm (0.43 அங்) அதிக நீளத்தில் அறியப்படவில்லை. மற்றும் இரண்டு லெப்டோபிலிப்னியன் [4][7][8][9] ஒரு சில மாதிரிகள் மட்டுமே அளவிடப்பட்டிருப்பதால், இவற்றின் முழு வரம்பைப் பற்றிய நிச்சயமற்ற நிலை உள்ளது.[10]
இவற்றில் பெரும்பாலானவற்றின் எடையில் சிறிய அல்லது தரவு கிடைக்கவில்லை என்ற நிலை உள்ளது. தடித்த சிசு மீன் (சிண்டிலேரியா பிரெவிபிங்குயிசு) மிகச்சிறியதாக (1 மில்லி கிராமுக்கும் குறைவாக) இருக்கலாம்.[1]