From Wikipedia, the free encyclopedia
மார்ட்டின் எய்டெகர் (Martin Heidegger, 26 செப்டம்பர் 1889 – 26 மே 1976)[1] செருமானிய மெய்யியலாளர்.
மார்ட்டின் எய்டெகர் | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 26, 1889 மெசுகிர்ச், ஜெர்மனி |
இறப்பு | மே 26, 1976 86) பிரைய்பெர்கு, ஜெர்மனி | (அகவை
காலம் | 20ஆம்-நூற்றாண்டு மெய்யியல் |
பகுதி | மேற்கத்திய மெய்யியல் |
பள்ளி | நனவு அனுபவ இயல் · உரை கோட்பாட்டியல் · இருத்தலியல் · கட்டுடைப்பு |
முக்கிய ஆர்வங்கள் | உள்ளியம் (மெய்யியல்) · மீவியற்பியல் · கலை · பண்டைய கிரேக்க மெய்யியல் · தொழினுட்பம் · மொழி · கவிதை · சிந்தித்தல் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | தாசேன் · கெஸ்டெல் · எய்டெகரிய சொல்லியல் |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
இவரது புகழ்பெற்ற நூலான இருத்தலும் நேரமும்(Being and Time) இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த, முதன்மையான மெய்யியல் படைப்பாக கருதப்படுகின்றது.[2][3] இது செருமானிய வாசகர்களுக்குக் கூட மிகக் கடினமான நூலாகும். இதிலும் பிந்தைய ஆக்கங்களிலும் எய்டெகர் நாம் கேள்வி எழுப்புவதே நம்மை வரையறுக்கும் என நிறுவினார். ஆனால் மெய்யியலில் கேள்வி கேட்பதே மேற்கத்திய பண்பாட்டில் மறைந்து வருவதாகக் கருதினார்.
நாம் முன் முடிவுகளால் வீழ்ந்துள்ளதாகவும் உண்மையை அதனை மறைத்திருக்கும் சேற்றிலிருந்து காணத் தவறி விட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.[4] இவைகளுக்குத் தீர்வாக எய்டெகர் நடைமுறை வாழ்விற்குத் திரும்பப் பரிந்துரைத்தார். இதன்மூலம் உண்மை தன்னை வெளிப்படுத்த அல்லது "மறைவிலிருந்து வெளிவர" இயலும் என நம்பினார்.
எய்டெகர் நாட்சி கட்சி உறுப்பினராகவும் ஆதரவாளராகவும் இருந்தார்.[5][6] எய்டெகரின் மெய்யியல் கோட்பாட்டிற்கும் நாசிசத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.[7][8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.