மார்கோட் எலிசபெத் வால்ஸ்ட்ரோம் ( Margot Elisabeth Wallström) ( பிறப்பு செப்டம்பர் 28,1954 ) [1] சுவீடன் சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் சுவீடனின் துணைப் பிரதமராகவும், 2014 முதல் 2019 வரை வெளியுறவு அமைச்சராகவும், 2016 முதல் 2019 வரை நோர்டிக் ஒத்துழைப்புக்கான அமைச்சராகவும் பணியாற்றினார்.

விரைவான உண்மைகள் மார்கோட் வால்ஸ்ட்ரோம், தனிப்பட்ட விவரங்கள் ...
மார்கோட் வால்ஸ்ட்ரோம்
Thumb
2006 இல் மார்கோட் வால்ஸ்ட்ரோம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மார்கோட் எலிசபெத் வால்ஸ்ட்ரோம்

28 செப்டம்பர் 1954 (1954-09-28) (அகவை 70)
இசுகெலப்டா, சுவீடன்
அரசியல் கட்சிசுவீடன் சமூக ஜனநாயகக் கட்சி
துணைவர்
அக்கன் அல்சன் (தி. 1984)
பிள்ளைகள்2
கையெழுத்துThumb
மூடு

மார்கோட் வோல்ஸ்ட்ரோம், முன்னர் 2010 முதல் 2012 வரை பாலியல் வன்முறை தொடர்பான முதல் ஐக்கிய நாடுகளின் சிறப்பு பிரதிநிதியாகவும், [2] [3] ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவராகவும், 2004 முதல் 2010 வரை நிறுவன உறவுகள் மற்றும் தகவல் தொடர்பு மூலோபாயத்திற்கான ஐரோப்பிய ஆணையராகவும், 1999 முதல் 2004 வரை சுற்றுச்சூழல் ஆணையராகவும், 1988 முதல் 1991 வரை நுகர்வோர் விவகார அமைச்சர் மற்றும் 1982 முதல் 1999 வரை வார்ம்லாந்திற்கான சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

இசுகெலப்டா என்ற இடத்தில் பிறந்த வால்ஸ்ட்ரோம், உயர்நிலைப் பள்ளி வரை மட்டுமே பயின்றுள்ளார். 1973 ஆம் ஆண்டில், கார்ல்ஸ்டாட்டில் உள்ள ஆல்ஃபா சேமிப்பு வங்கியில் எழுத்தராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். [4] அங்கு இவர் 1977 முதல் 1979 வரை பணிபுரிந்தார். மேலும் 1986 முதல் 1987 வரை சிலகாலம் கணக்காளராக பணியாற்றினார். வால்ஸ்ட்ராம் 1993 முதல் 1994 வரை சுவீடனில் உள்ள வார்ம்லேண்டில் உள்ள பிராந்திய தொலைக்காட்சி நிறுவன வலையமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். இவர் ஐரோப்பிய ஒன்றிய ஆணையராக நியமனம் பெறுவதற்கு முன்பு, இலங்கையின் கொழும்பிலுள்ள வேர்ல்ட்வியூ குளோபல் மீடியாவின் நிர்வாக துணைத் தலைவராக இருந்தார்.

அரசியல் வாழ்க்கை

சுவீடன் நாடாளுமன்றம், சுவீடன் அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஆணையம் ஆகிய சுவீடன் அரசியலில் வால்ஸ்ட்ரோம் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.[5] தனது 25 வயதில் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 முதல் 2004 வரை சுற்றுச்சூழல் ஆணையராகவும், சுவீடன் அரசாங்கத்தில் 1988 முதல் 1991 வரை நுகர்வோர் விவகாரங்கள், பெண்கள் மற்றும் இளைஞர் அமைச்சராகவும், 1994 முதல் 1996 வரை கலாச்சார அமைச்சராகவும், 1996 முதல் 1998 வரை சமூக விவகார அமைச்சராகவும் இருந்தார்.

இவர் பதவியில் இருந்த காலத்தில், ஐரோப்பிய ஆணையத்தின் இரசாயனங்களின் பதிவு, மதிப்பீடு, அங்கீகாரம் மற்றும் கட்டுப்பாடு ஆரம்ப திட்டத்தை முன்வைத்தார். இதற்கு முன்பு இரசாயன உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றைப் பரிசோதித்து ஐரோப்பிய இரசாயன நிறுவனத்தில் பதிவு செய்ய வேண்டும்.[6] அமெரிக்க பன்னாட்டு வேளாண்மை உயிர் தொழில்நுட்ப, விதை மற்றும் வேளாண் வேதியியல் நிறுவனமான மொன்சன்ரொவில் உருவாக்கப்பட்ட என்கே603 மக்காச்சோளம் கடுமையாகப் பரிசோதிக்கப்பட்டதாகவும், "எந்தவொரு வழக்கமான மக்காச்சோளத்தையும் போல பாதுகாப்பானது" எனவும் வாதிட்டது.[7] பின்னர் 2004 ஆம் ஆண்டில், ஆறு வருட கால அவகாசத்திற்குப் பிறகு கால்நடைத் தீவனத்திற்காக அமெரிக்காவில் இருந்து மரபணு மாற்றப்பட்ட சோளத்தை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.