மலாக்கா மாநகரம்
From Wikipedia, the free encyclopedia
மலாக்கா மாநகரம் (ஆங்கிலம்: Malacca Historical City; மலாய்: Bandaraya Melaka) என்பது மலாக்கா மாநிலத்தின் தலைநகரமாகும். ஸ்ரீ நெகிரி என அழைக்கப்படும் மலாக்கா மாநிலத்தின் நிர்வாக மேம்பாட்டு மையம்; மலாக்கா முதலமைச்சரின் பணிமனை; மாநில அரசாங்கச் செயலாளரின் பணிமனை; மலாக்கா மாநில சட்டமன்றம் போன்றவை இங்கு உள்ளன.
விரைவான உண்மைகள் மலாக்கா மாநகரம், நாடு ...
மலாக்கா மாநகரம் | |
---|---|
Malacca Historical City Bandaraya Melaka | |
மலாக்கா | |
அடைபெயர்(கள்): வரலாற்று மாநகரம் Bandaraya Bersejarah Historical City | |
ஆள்கூறுகள்: 02°11′40″N 102°14′55″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | மலாக்கா |
மாவட்டம் | மத்திய மலாக்கா |
அமைந்தது | 1396 |
மாநகரத் தகுதி | 2003 |
அரசு | |
• மேயர் | சடான் ஒசுமான் |
பரப்பளவு | |
• மொத்தம் | 277 km2 (107 sq mi) |
மக்கள்தொகை (2019) | |
• மொத்தம் | 5,79,000 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசியாவின் அஞ்சல் குறியீடுகள் | 75xxx to 78xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6-06-5 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | M |
இணையதளம் | mbmb |
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம் | |
அலுவல்முறைப் பெயர் | மலாக்கா வரலாற்று நகரம் |
பகுதி | மலாக்கா; ஜார்ஜ் டவுன், மலாக்கா நீரிணையின்யின் வரலாற்று நகரங்கள் |
கட்டளை விதி | பண்பாட்டுக் களம்: (ii)(iii)(iv) |
உசாத்துணை | 1223bis-001 |
பதிவு | 2008 (32-ஆம் அமர்வு) |
விரிவுகள் | 2011 |
பரப்பளவு | 45.3 ha (112 ஏக்கர்கள்) |
Buffer zone | 242.8 ha (600 ஏக்கர்கள்) |
மூடு
யுனெஸ்கோ நிறுவனம், 2008 ஆம் ஆண்டு சூலை 7-ஆம் தேதி மலாக்காவை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்தது.[1] அதே திகதியில், பினாங்கு மாநிலத்தின் ஜோர்ஜ் டவுன் மாநகரமும் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.[2]