![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/49/Malappuram_DownHill_Aerial_View.jpg/640px-Malappuram_DownHill_Aerial_View.jpg&w=640&q=50)
மலப்புறம் பெருநகரப் பகுதி
கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள மாநகர்பகுதி / From Wikipedia, the free encyclopedia
மலப்புறம் பெருநகரப் பகுதி (Malappuram metropolitan area) என்பது இந்தியாவின் கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மலப்புறம், மஞ்சேரி நகரை மையமாகக் கொண்ட ஒரு நகர்ப்புற ஒருங்கிணைப்பு பகுதி ஆகும். [3] இது இந்தியாவின் 25வது பெரிய மாநகர்ப்புற பகுதி மற்றும் கேரளத்தின் நான்காவது பெரிய மாநகர் பகுதியாகும்.
மலப்புறம் பெருமாநகரப் பகுதி | |
---|---|
பெருநகர் | |
மேலிருந்து கடிகார வரிசையில்: மலப்புறம் நகரமண்டபம், பொன்னானி துறைமுகம், சாம்ரவட்டம் ஒழுங்குபடுத்தியுடனான பாலம், கோட்டக்குன்னு பூங்கா, பையநாடு ஆடுகளம், மகா கவி மொயின்குட்டி வைத்தியர் ஸ்மாரகம், கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம், கோழிக்கோடு பல்கலைக்கழகம், , பொன்னானி துறைமுகம் | |
![]() மலப்புறம் பெருமாநகரப் பகுதி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | மலப்புறம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 858 km2 (331 sq mi) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 17,29,522 |
• அடர்த்தி | 2,000/km2 (5,200/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | KL-10, KL-55, KL-84, KL-65,KL-53,KL-54 |
அருகில் உள்ள நகரங்கள் | மலப்புறம்,மஞ்சேரி |
பாலின விகிதம் | 1102 ♀/1000♂ |
கல்வியறிவு | 94.14% |
இது மலப்புரம் நகராட்சியும், அதன் அருகில் உள்ள நகராட்சிகளையும், மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரங்களையும் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதியில் 1.7 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இன்னும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படாத, பத்து இலட்சத்துக்கும் கூடுதலான நகர்ப்புற ஒருங்கிணைப்பைக் கொண்ட கேரளத்தின் ஒரே நகரமாக இது உள்ளது. 2020 சனவரியில் நகர்ப்புற வளர்ச்சியின் அடிப்படையில் எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU) நடத்திய ஆய்வின்படி, 2015 மற்றும் 2020 இக்கு இடையில் 44.1% நகர்ப்புற வளர்ச்சியுடன் இது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெருநகரப் பகுதியாக உள்ளது. [4] 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, மலப்புறம் பெருநகரப் பகுதியில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 94.14% என்று உள்ளது. இது தேசிய நகர்ப்புற கல்வியறிவு விகித சராசரியான 85% ஐ விட அதிகமாகும்.