![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4e/Monroecirca1953.jpg/640px-Monroecirca1953.jpg&w=640&q=50)
மர்லின் மன்றோ
அமெரிக்க நடிகை(1926–1962) / From Wikipedia, the free encyclopedia
மர்லின் மன்றோ Marilyn Monroe, ஜூன் 1, 1926 – ஆகஸ்ட் 5, 1962), அமெரிக்க நடிகையும் பாடகியும் திரைப்பட இயக்குநரும் ஆவார். அவர் 1950 களில் மிகவும் பிரபலமான பாலின அடையாளங்களில் ஒன்றாகவும், பாலியல் தொடர்பான காலகட்ட மனப்பான்மையின் அடையாளமாகவும் இருந்தார். ஒரு தசாப்தத்திற்கு சிறந்த நடிகையாக இருந்தார் என்றாலும், அவரது திரைப்படங்கள் 1962 ஆம் ஆண்டில் எதிர்பாராத அவரது மரணத்தால் $ 200 மில்லியனை வசூலித்தன.[1] இவர் இறந்தபின்னும் ஒரு பிரபலமான கலாச்சாரச் சின்னமாக தொடர்ந்து கருதப்படுகிறார்.[2]
மர்லின் மன்றோ Marilyn Monroe | ||||||
---|---|---|---|---|---|---|
![]() த பிரின்ஸ் அண்ட் த ஷோகேர்ல் (1957) திரைப்படத்தில் | ||||||
இயற் பெயர் | நோர்மா ஜீன் மோர்ட்டென்சன் | |||||
பிறப்பு | (1926-06-01)சூன் 1, 1926 லொஸ் ஏஞ்சலீஸ், கலிபோர்னியா ![]() | |||||
இறப்பு | ஆகத்து 5, 1962(1962-08-05) (அகவை 36) லொஸ் ஏஞ்சலீஸ், கலிபோர்னியா, ![]() | |||||
வேறு பெயர் | நோர்மா ஜீன் பேக்கர் | |||||
தொழில் | நடிகை, மாடல், ஒப்பனையாளர், இயக்குநர் | |||||
நடிப்புக் காலம் | 1947–1962 | |||||
துணைவர் | ஜேம்ஸ் டொகேர்ட்டி (1942-1946) | |||||
இணையத்தளம் | http://www.marilynmonroe.com/ | |||||
|
இவர் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்து வளர்ந்தார், மன்றோ தனது குழந்தைப் பருவத்தை வளர்ப்பு வீடுகளில் மற்றும் ஒரு அனாதை இல்லத்தில் கழித்தார், பதினாறு வயதில் திருமணம் செய்து கொண்டார். போர் காலகட்டமான 1944 இல் இவர் ஒரு ரேடியோபேன் தொழிற்சாலை வேலை செய்யும் போது, தற்செயலாக ஃபர்ஸ்ட் மோஷன் பிக்சர் யூனிட்டிலிருந்து வந்த ஒரு ஒளிப்படக் கலைஞர் எடுத்த ஒளிப்படத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமான வடிவழகி தொழிலைத் தொடங்கினார். இது 20ஆம் சென்சுரி பாக்ஸ் (1946-1947) மற்றும் கொலம்பியா பிக்சர்ஸ் (1948) ஆகிய திரைப்பட நிறுவனங்களுடன் குறுகிய கால திரைப்பட ஒப்பந்தங்கள் ஏற்பட வழிவகுத்தது. திரைப்படங்களில் தொடர்ச்சியாக சிறு பாத்திரங்களில் நடித்துவந்த நிலையில், 1951 இல் பாக்ஸ் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன் தொடர்ச்சியாக அடுத்த இரண்டு ஆண்டுகளில், அவர் பல நகைச்சுவை பாத்திரங்களை ஏற்று பிரபலமான நடிகை ஆனார். இக்காலகட்டத்தில் மர்லின் மன்றோ திரைப்பட நடிகையாவதற்கு முன்னர் அவரைக் கொண்டு எடுக்கப்பட்ட நிர்வாண ஒளிப்படங்கள் வெளிவந்து குழப்பத்தை ஏற்படுத்தின, ஆனால் இந்த நிர்வாண ஒளிப்படங்கள் அவரது தொழிலைப் பாதிக்காமல், மேலும் அவரது படங்களை அதிகம் பிரபலமாக்கியது.
1953 வாக்கில், மிகச் சிறந்த ஹாலிவுட் நட்சத்திரங்களான மூன்று முன்னணி நடிகர்களுடன் இணைந்து முதன்மைப் பாத்திரங்களில் நடித்தார்: நூர், நயாகரா ஆகிய படங்கள் இவரை பாலியல் குறியீடாக்கின, மற்றும் ஜென்டில்மென் ப்லோண்டேஸ் மற்றும் ஹவ் டு மேரி மில்லியனர் ஆகிய நகைச்சுவைப் படங்களின் வழியாக நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
திரைப்பட நிறுவனத்துக்கும் மன்றோவுக்கும் திரைப்பட ஒப்பந்த விசயமாக முறுகள் நிலை தோன்றியபோது, மன்ரோ 1954 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தானே ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார்; திரைப்பட நிறுவனத்துக்கு மர்லின் மன்றோ புரொடக்சன்ஸ் (MMP) என்று பெயரிட்டார். 1955 ஆம் ஆண்டு தனது திரைப்பட நிறுவனத்தை உருவாக்கி, நடிகர்கள் திரைப்பட நிறுவனங்கள் செயல்படும் முறைகள் போன்றவற்றைக் கற்கத் தொடங்கினார். 1955 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், பாக்ஸ் திரைப்பட நிறுவனம் மன்றோவுடன் புதிய திரைப்பட ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது, இது மன்றோவுக்கு அதிக கட்டுப்பாடு மற்றும் பெரிய ஊதியத்தைக் கொண்டதாக இருந்தது. பஸ் ஸ்டாப் (1956), பிரின்ஸ் அண்ட் தி ஷோர்கர் (1957), படத்தில் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டார், சம் லைக் இட் ஹாட் (1959) படத்திற்காக சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதைப் பெற்றார். இவரது இறுதித் திரைப்படம் தி மிஸ்ஃபிட்ஸ் (1961).
மன்றோவின் சொந்த வாழ்க்கை மிகவும் துன்பமயமானதாக இருந்தது. பொருள் இழப்பு, மனச்சோர்வு, கவலை ஆகியவற்றால் அவர் போராடினார். ஓய்வு பெற்ற பேஸ்பால் நட்சத்திரமான ஜோ டிமாஜியோ மற்றும் நாடக ஆசிரியரான ஆர்தர் மில்லர் ஆகிய இருவருடனான அடுத்தடுத்த திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிவடைந்தது. 1962 ஆகத்து 5 அன்று, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் அதிகமான பார்பிகுரேட்டட்ஸின் மருந்தை உட்கொண்டதால் 36 வயதில் இறந்தார். மன்றோவின் மரணம் ஒரு தற்கொலை எனக் கருதப்பட்டாலும், அவரின் தற்கொலையைப் பற்றி பல கருத்துகள் அவருடைய இறப்புக்குப் பிறகு பல தசாப்தங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன.
1999 ஆம் ஆண்டில் அமெரிக்க திரைப்படக் கழகத்தினால் (AFI) மன்றோவை அனைத்துக் காலத்துக்குமான சிறந்த நடிகை (greatest female star of all time) என்ற விருது வழங்கிச் சிறப்பித்தது. உலகில் ஏற்பட்ட கலாசார மாற்றம் அல்லது புதிய கலாச்சாரத்திற்குக் காரணமான நடிகையாகவும் இவர் காணப்படுகின்றார்.