From Wikipedia, the free encyclopedia
மரியா பெட்ராசா (ஆங்கில மொழி: María Pedraza) (பிறப்பு: 26 சனவரி 1996)[1] என்பவர் எசுப்பானிய நாட்டு நடிகை, நடனக் கலைஞர் மற்றும் வடிவழகி ஆவார். இவர் நெற்ஃபிளிக்சு தொடர்களான மணி ஹெய்ஸ்ட்[2] மற்றும் எலைட்[3] போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்.
மரியா பெட்ராசா | |
---|---|
மரியா பெட்ராசா (2019) | |
பிறப்பு | 26 சனவரி 1996 மத்ரித், எசுப்பானியா |
தேசியம் | எசுப்பானியர் |
பணி | நடிகை நடனக் கலைஞர் வடிவழகி |
செயற்பாட்டுக் காலம் | 2017–இன்று வரை |
துணைவர் | ஜெய்மி லோரென்டே (2018-2020) |
இயக்குனர் எஸ்டெபன் கிரெஸ்போவால் என்பவர் பெட்ராசாவின் இன்ஸ்ட்டாகிராம் கணக்கின் மூலம் கவரப்பட்டு, அவரின் முதல் படமான 'அமர்' என்ற திரைப்படத்தில் லாரா என்ற கதாபாத்திரம் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமாகினார்.[4][5][6] அதன் பிறகு நெற்ஃபிளிக்சு தொடரான மணி ஹெய்ஸ்ட்[7] என்ற இணையத் தொடரில் முதல் இரண்டு பருவங்களிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த தொடர் இவருக்கு மிகப்பெரிய பெயரையும் வெற்றியையும் பெற்றதுக் கொடுத்தது. அதை தொடர்ந்து மீண்டும் நெற்ஃபிளிக்சுக்காக எலைட்[8] என்ற தொடரின் முதல் பருவத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.