From Wikipedia, the free encyclopedia
நவீன மூலக்கூற்று உயிரியல், மற்றும் மரபியல்படி, மரபணுத்தொகை (Genome) என்பது ஒரு உயிரினத்தின் முழுமையான பாரம்பரியத் தகவல்களின் தொகுப்பைக் குறிக்கின்றது. இது உயிரினங்களின் டி.என்.ஏயில், அல்லது பல தீ நுண்மங்களில் ஆர்.என்.ஏயில் குறியாக்கம் செய்யப்பட்டிருக்கும். ஒரு குறிக்கப்பட்ட ஒரு உயிரினத்தைப் பற்றிய அனைத்து மரபியல் தகவல்களையும் குறிக்கிறது. மரபணுத்தொகையானது, டி.என்.ஏ, ஆர்.என்.ஏ யில் அமைந்திருக்கும் மரபணுக்களையும் அத்துடன் , குறியாக்கத்தைக் கொண்டிராத பகுதிகளையும் சேர்த்தே குறிக்கின்றது[1]. மரபணுத்தொகை என்பது genome என்ற ஆங்கில சொல்லின் தற்கால பயன்பாட்டுக்கு இணையான சொல். மரபணுத்தொகையை மரபகராதி, மரபுத்தொகுதி, மரபுரேகை, மரபுப்பதிவு என்றும் குறிப்பர்.
மனித மரபணுத்தொகைத் திட்டம் மூலம் 2000 ஆண்டு மனித மரபணுத்தொகையின் முழு வடிவத்தையும் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் 10 ஆண்டுகளுக்கு மேலே எடுத்தது. தற்போது ஒரு உயிரினத்தின் மரபணுத்தொகையைக் கண்டுபிடிக்கும் தொழினுட்பம் பல மடங்கு முன்னேறியுள்ளது. எதிர்காலத்தில் ஒவ்வொரு மனிதரும் தமது தனித்துவமான மரபணுத்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
உயிரினம் | மரபணுத்தொகையின் அளவு (இணையத் தாங்கிகள் - base pairs) | குறிப்பு |
---|---|---|
தீ நுண்மம், Bacteriophage MS2 | 3,569 | First sequenced RNA-genome[2] |
தீ நுண்மம், SV40 | 5,224 | [3] |
தீ நுண்மம், Phage Φ-X174; | 5,386 | First sequenced DNA-genome[4] |
தீ நுண்மம், Phage λ | 50,000 | |
பாக்டீரியா, Haemophilus influenzae | 1,830,000 | First genome of living organism, July 1995[5] |
பாக்டீரியா, Carsonella ruddii | 160,000 | Smallest non-viral genome.[6] |
பாக்டீரியா, Buchnera aphidicola | 600,000 | |
பாக்டீரியா, Wigglesworthia glossinidia | 700,000 | |
பாக்டீரியா, எசரிக்கியா கோலை | 4,000,000 | [7] |
அமீபா, Amoeba dubia | 670,000,000,000 | Largest known genome.[8] |
தாவரம், Arabidopsis thaliana | 157,000,000 | First plant genome sequenced, Dec 2000.[9] |
தாவரம், Genlisea margaretae | 63,400,000 | Smallest recorded பூக்கும் தாவரம் genome, 2006.[9] |
தாவரம், Fritillaria assyrica | 130,000,000,000 | |
தாவரம், Populus trichocarpa | 480,000,000 | First tree genome, Sept 2006 |
மதுவம்,Saccharomyces cerevisiae | 20,000,000 | [10] |
பூஞ்சை, Aspergillus nidulans | 30,000,000 | |
Nematode, Caenorhabditis elegans | 98,000,000 | First multicellular animal genome, December 1998[11] |
பூச்சி, Drosophila melanogaster aka Fruit Fly | 130,000,000 | [12] |
பூச்சி, பட்டுப்புழு aka Silk Moth | 530,000,000 | |
பூச்சி, Apis mellifera aka Honey Bee | 1,770,000,000 | |
மீன், Tetraodon nigroviridis, type of Puffer fish | 385,000,000 | Smallest vertebrate genome known |
பாலூட்டி, Homo sapiens | 3,200,000,000 | |
மீன், Protopterus aethiopicus aka Marbled lungfish | 130,000,000,000 | Largest vertebrate genome known |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.