தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
மத்திய சென்னை மக்களவைத் தொகுதி (Chennai Central Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 4வது தொகுதி ஆகும். இது இந்தியாவின் மிகச்சிறிய தொகுதிகளில் ஒன்றாகும். இம்மக்களவைத் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு தேர்தலில் முதல் முறையாக, வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை முறை செய்யப்பட்டது.[2][3][4]
மத்திய சென்னை மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
மத்திய சென்னை மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1977-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 13,16,603[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 14. வில்லிவாக்கம் 16. எழும்பூர் (தனி) 18. துறைமுகம் 19. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி 20. ஆயிரம் விளக்கு 21. அண்ணா நகர் |
2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன், மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் பூங்கா நகர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. இவற்றில் தனித் தனி தொகுதிகளாக இருந்து வந்த சேப்பாக்கமும், திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக்கப்பட்டன. பிரிக்கப்பட்ட வில்லிவாக்கம் தொகுதி, சென்னை மத்திய தொகுதியில் இணைக்கப்பட்டது.
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
ஆண்டு | வென்ற வேட்பாளர் | கட்சி | இரண்டாம் இடம் | கட்சி |
---|---|---|---|---|
1977 | பா. ராமச்சந்திரன் | நிறுவன காங்கிரசு | கே. ராஜா முகமது | அதிமுக |
1980 | ஏ. கலாநிதி | திமுக | பா. ராமச்சந்திரன் | ஜனதா கட்சி |
1984 | ஏ. கலாநிதி | திமுக | இ. பால் ஏர்னஸ்ட் | காந்தி காமராசு காங்கிரசு |
1989 | இரா. அன்பரசு | இதேகா | ஏ. கலாநிதி | திமுக |
1991 | இரா. அன்பரசு | இதேகா | என். வி. என். சோமு | திமுக |
1996 | முரசொலி மாறன் | திமுக | ஜி. கே. ஜே. பாரதி | இதேகா |
1998 | முரசொலி மாறன் | திமுக | து. ஜெயக்குமார் | அதிமுக |
1999 | முரசொலி மாறன் | திமுக | எம். அப்துல் லத்தீப் | அதிமுக |
2004 | தயாநிதி மாறன் | திமுக | என். பாலகங்கா | அதிமுக |
2009 | தயாநிதி மாறன் | திமுக | முகமது அலி ஜின்னா | அதிமுக |
2014 | எஸ். ஆர். விஜயகுமார் | அதிமுக | தயாநிதி மாறன் | திமுக |
2019 | தயாநிதி மாறன்[5] | திமுக | எஸ். ஆர். சாம் பவுல் | பாமக |
2024 | தயாநிதி மாறன் | திமுக | வினோஜ் பி. செல்வம் | பாஜக |
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
தயாநிதி மாறன் | திமுக | 4,13,848 |
வினோஜ் பி. செல்வம் | பாஜக | 1,69,159 |
பார்த்தசாரதி | தே.மு.தி.க | 72,016 |
கார்த்திகேயன் | நாதக | 46,031 |
இத்தேர்தலில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், பாமக வேட்பாளரான, சாம் பவுலை, 3,01,520 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் |
---|---|---|---|---|---|
தயாநிதி மாறன் | திமுக | 1761 | 4,48,911 | 57.15% | |
சாம் பவுல் | பாமக | 578 | 1,47,391 | 18.77% | |
கமீலா நாசர் | மக்கள் நீதி மய்யம் | 202 | 92,249 | 11.74% | |
கார்த்திகேயன் | நாம் தமிழர் கட்சி | 77 | 30,886 | 3.93% | |
சேக் மொஹமத் | இந்திய சமூக ஜனநாயகக் கட்சி | 51 | 23,741 | 3.02% | |
நோட்டா | - | - | 54 | 13,822 | 1.76% |
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
விஜயகுமார் | அதிமுக | 3,33,296 |
தயாநிதி மாறன் | திமுக | 2,87,455 |
ரவீந்திரன் | தே.மு.தி.க | 1,14,798 |
மெய்யப்பன் | காங் | 25,981 |
ஜெ. பிரபாகர் | ஆம் ஆத்மி | 19,553 |
37 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் தயாநிதி மாறன், அதிமுகவின் முகமது அலி ஜின்னாவை 33,454 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
தயாநிதி மாறன் | திமுக | 2,85,783 |
முகமது அலி ஜின்னா | அதிமுக | 2,52,329 |
வி. வி. இராமகிருட்டிணன் | தேமுதிக | 38,959 |
செ. ஹைதர்அலி | மனிதநேய மக்கள் கட்சி | 13,160 |
தயாநிதி மாறன் (திமுக) – 3,16,329
பாலகங்கா (அதிமுக) – 1,82,151
வெற்றி வேறுபாடு - 1,34,178 வாக்குகள்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.