மதுரா மாவட்டம் (இந்தி: मथुरा ज़िला, உருது: متھرا ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஒரு மாவட்டம். வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரா இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டத்தின் எல்லையாக வடகிழக்கில் அலிகார்ஹ் மாவட்டமும், தென்கிழக்கில் ஹத்ராஸ் மாவட்டமும், தெற்கில் ஆக்ரா மாவட்டமும், மேற்கில் ராஜஸ்தான் மாநிலமும், வடமேற்கில் ஹரியானா மாநிலமும் அமைந்துள்ளன. இம்மாவட்டம் ஆக்ரா கோட்டத்தின் ஒரு பகுதியாகும்.

விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
Thumb
மதுராமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம்
மாநிலம்உத்தரப்பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்ஆக்ரா
தலைமையகம்மதுரா
பரப்பு3,329.4 km2 (1,285.5 sq mi)
மக்கட்தொகை1,647,840 (1991)
நகர்ப்புற மக்கட்தொகை425,760
படிப்பறிவு62.21 per cent[1]
வட்டங்கள்3
மக்களவைத்தொகுதிகள்மதுரா
அதிகாரப்பூர்வ இணையத்தளம்
மூடு

மாவட்ட நிர்வாகம்

மதுரா மாவட்டம் மதுரா, கோவர்தனம், சாத்தா, மாண்ட் மற்றும் மகாவன் எனும் 5 வருவாய் வட்டங்களும், மதுரா-பிருந்தாவனம் மாநகராட்சியும், கோசி கலான் எனும் நகராட்சியும், பஜனா, பல்தேவ், பர்சானா, சௌமுகா, சாத்தா, பாரா, கோவர்தன், மகாவான், நந்தகோன், இராதா குண்டம், இராயா மற்றும் சோங்க் எனும் 11 பேரூராட்சிகளும், 880 கிராமங்களும் கொண்டது.

நாடாளுமன்ற மக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி மதுரா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 2,541,894.[2] இது தோராயமாக குவைத் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 167வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 761 inhabitants per square kilometre (1,970/sq mi).[2] மேலும் மதுரா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 22.53%.[2] மதுரா மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 858 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் மதுரா மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 72.65%.[2]

பார்க்க வேண்டிய இடங்கள்

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.