மஞ்சிரா ஆறு
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
மஞ்சரா அல்லது மஞ்சீரா என்றும் அழைக்கப்படும் ஆறு, கோதாவரி ஆற்றின் துணை ஆறாகும். இது மகாராட்டிரா, கர்நாடகா மற்றும் தெலங்காணா மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. மஞ்சீரா ஆறு 823 மீட்டர் (2,700 அடி) உயரத்தில் அகமதுநகர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள பாலாகாட் மலைத்தொடரில் உருவாகிறது. மஞ்சீரா ஆறுகோதாவரி ஆற்றில் கலக்கிறது. இது 30,844 சதுர கிலோமீட்டர்கள் (3,084,400 ha) நீர்ப்பிடிப்புப் பகுதியைக் கொண்டுள்ளது.[1]
Manjira (Manjara river in Maharashtra) | |
---|---|
Manjara rivercourse visible in top half. | |
அமைவு | |
Country | இந்தியா |
State | மகாராட்டிரம், கருநாடகம், தெலங்காணா |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | மகாராட்டிரம், இந்தியா |
முகத்துவாரம் | கோதாவரி |
⁃ அமைவு | சங்கம், மகாராட்டிரம், இந்தியா |
நீளம் | 724 km (450 mi) |
வடிநில அளவு | 30,844 km2 (11,909 sq mi) |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | சங்கம் |
ஆற்றின் பிறப்பிடம் பீடூ மாவட்டத்தின் கவல்வாடி கிராமத்திற்கு அருகில் உள்ளது. இந்த நதி உஸ்மானாபாத் மாவட்டத்தின் வடக்கு எல்லையிலிருந்து பாய்கிறது. லாத்தூர் மாவட்டத்தின் குறுக்கே கர்நாடகா மாநிலத்தின் பிதார் மாவட்டத்திற்கும் இறுதியாக தெலங்காணாவிற்கும் செல்கிறது. இது பாலகாட் பீடபூமியில் இதன் துணை நதிகளான டெர்னா, தவர்ஜா மற்றும் கர்னியுடன் பாய்கின்றது. மஞ்சராவின் மற்ற மூன்று துணை ஆறுகள் மன்யாட், தேரு மற்றும் லெண்டி ஆகியவை வடக்கு சமவெளியில் ஓடுகின்றன.
மஞ்சிரா ஆறு, தன் நீளத்தின் முதல் மூன்றில் இரண்டு பகுதிகளில் பொதுவாக மேற்கிலிருந்து கிழக்கு திசையில் பாய்கிறது. தெலங்காணாவில் உள்ள சங்கா ரெட்டி நகரம் வரை, சிறிது தன் போக்கை மாற்றி வடக்கே பாய்கிறது. நதியின் இறுதிப் பகுதியானது மேற்கில் மகாராட்டிராவிற்கும் கிழக்கே தெலங்காணாவிற்கும் இடையே எல்லையாக அமைகிறது. மஞ்சிரா ஆறு, அரித்ரா ஆற்றுடன் இணைந்து மகாராட்டிராவின் தர்மபாத், மற்றும் தெலங்காணாவில் தென்கிழக்கில் கண்டகுர்த்தியுடன் எல்லையில் கோதாவரி நதியுடன் இணைகிறது. இந்த திரிவேணி சங்கமம் இந்துக்களுக்குப் புனிதமானது. தெலங்காணா ,மாநிலத்தில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் உள்ள பாசரில் உள்ள புகழ்பெற்ற புனிதமான ஸ்ரீ ஞான சரஸ்வதி தேவஸ்தானம் கோதாவரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது.[2]
மோர்கி 1015 மக்கள்தொகை கொண்ட ஒரு கிராமம். இது மேடக் மாவட்டத்தில் (கருநாடகாம்) மற்றும் தெலங்காணா இடையேயான எல்லையில் மஞ்சீரா நதியைப் பிரிக்கிறது. இங்குள்ள கிராம மக்களுக்கு மஞ்சீரா முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. விவசாயம் முக்கிய தொழில். இது ஒரு மான் வாழக்கூடிய நீர்த்தேக்க பகுதியாகும்.[4]
மேடக் மாவட்டத்தில் உள்ள மஞ்சரா ஆற்றின் மீது உள்ள சிங்கூர் அணை மேடக் மற்றும் நிஜாமாபாத் மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய இரட்டை நகரங்களான ஐதராபாத்து மற்றும் செகந்திராபாத் ஆகியவற்றின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. மஞ்சரா நதி பீதர் நகரத்திற்கும் சேவை செய்கிறது.
நிஜாம் சாகர் அணை இந்தியாவின் தெலங்காணாவில் உள்ள நிஜாமாபாத் மாவட்டத்தின் அச்சம்பேட்டா மற்றும் பஞ்சபல்லே கிராமங்களுக்கு இடையே மஞ்சரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 15 அடி அகலத்தில் வாகனம் செல்லக்கூடிய சாலையுடன் 3 கிலோமீட்டர் நீளத்திற்கு ஆற்றின் குறுக்கே பரந்து விரிந்து கிடக்கும் பிரம்மாண்டமான கொத்து அணை இந்த திட்டத்தின் மிகச்சிறந்த அம்சமாகும்.
மஞ்சிரா மகாராஷ்டிராவில் மஞ்சரா நதி என்றும் அழைக்கப்படுகிறது.
20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மகாராட்டிராவில் உள்ள மஞ்சிராவின் மேல் பகுதிகள் சுற்றுச்சூழல் சீர்கேட்டைச் சந்தித்தன. இது நிலத்தடி நீரை அதிகப்படுத்துவதற்குப் பதிலாக ஓட்டத்தினை அதிகரித்து, மண் அரிப்பு மற்றும் வண்டல் படிதலை அதிகரித்தது.[5][6][7][8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.