![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ec/Magnesium_sulfate_anhydrous.jpg/640px-Magnesium_sulfate_anhydrous.jpg&w=640&q=50)
மக்னீசியம் சல்பேட்டு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
மக்னீசியம் சல்பேட்டு (Magnesium sulfate) என்பது MgSO4 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம உப்புச் சேர்மம்) ஆகும். இது எப்சம் உப்பு (Epsom salt) உன அழைக்கப்படக்கூடிய எப்டாஐதரேட்டு சல்பேட்டு கனிமமான எப்சோமைட்டு (MgSO4·7H2O) உடன் சேர்த்து தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. இதன் ஒற்றைஐதரேட்டான MgSO4·H2O கீசரைட்டு கனிமமாக காணப்படுகிறது. 1970களின் மத்தியில் இதன் ஒட்டுமொத்த உலக வருடாந்திர பயன்பாடு 2.3 மில்லியன் டன்னாக இருந்தது. இந்த உப்பு அதிகமாக வேளாண்மைத் துறையில் பயன்படுத்தப்படுகிறது.[1] நீரற்ற மக்னீசியம் சல்பேட்டு ஒரு உலர்த்தும் காரணியாக பயன்படுத்தப்படுகிறது. நீரற்ற வடிவமானது காற்றிலிருந்து நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதன் காரணத்தால் இந்த வடிவத்தை துல்லியமாக எடையிடுவது கடினமாக உள்ளது. இந்த வடிவமானது, மருத்துவத் துறையில் கரைசல்களைத் தயாரிக்கப் பெரிதும் விரும்பப்படுகிறது. எப்சம் உப்பானது பாரம்பரியமாக குளியல் உப்பின் ஒரு பகுதிப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எப்சம் உப்பினை ஒரு அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்தலாம். மெய்வல்லுநர்கள் புண்பட்ட அல்லது வலியினால் பாதிக்கப்பட்ட தசைகளை தளர்த்திக் கொள்ள இதைப் பயன்படுத்துகிறார்கள். தோட்டங்களில் பயிர்களை நன்கு வளர்க்க இந்த உப்பு பயன்படுத்தப்படுகிறது. இந்த உப்பு இன்னும் பலவிதமான வழிகளில் பயன்படுகிறது. உதாரணமாக, எப்சம் உப்பு சிராய் துாளை நீக்குவதில் சிறப்பாக பயன்படுகிறது.[2]
![]() நீரற்ற மக்னீசியம் சல்பேட்டு | |
எப்சோமைட்டு (எப்டாஐதரேட்டு) | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மக்னீசியம் சல்பேட்டு | |
வேறு பெயர்கள்
எப்சம் உப்பு (எப்டாஐதரேட்டு) ஆங்கில உப்பு கசப்பு உப்புகள் குளியல் உப்புகள் | |
இனங்காட்டிகள் | |
7487-88-9 ![]() 14168-73-1 (மோனோஐதரேட்டு) ![]() 24378-31-2 (டெட்ராஐதரேட்டு) ![]() 15553-21-6 (பென்டாஐதரேட்டு) ![]() 13778-97-7 (எக்சாஐதரேட்டு) ![]() 10034-99-8 (எப்டாஐதரேட்டு) ![]() | |
ChEBI | CHEBI:32599 ![]() |
ChEMBL | ChEMBL1200456 ![]() |
ChemSpider | 22515 ![]() |
DrugBank | DB00653 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24083 |
வே.ந.வி.ப எண் | OM4500000 |
| |
UNII | ML30MJ2U7I ![]() |
பண்புகள் | |
MgSO4 | |
வாய்ப்பாட்டு எடை | 120.366 கி/மோல் (நீரிலி) 138.38 கி/மோல் (ஒற்றைஐதரேட்டு) 174.41 கி/மோல் (டிரைஐதரேட்டு) 210.44 கி/மோல் (பென்டாஐதரேட்டு) 228.46 கி/மோல் (எக்சாஐதரேட்டு) 246.47 கி/மோல் (எப்டாஐதரேட்டு) |
தோற்றம் | வெண்மை நிற படிகத் திண்மம் |
மணம் | மணமற்றது |
அடர்த்தி | 2.66 கி/செ.மீ 3 (நீரிலி) 2.445 கி/செ.மீ 3 (ஒற்றைஐதரேட்டு) 1.68 கி/செ.மீ 3 (எப்டாஐதரேட்டு) 1.512 கி/செ.மீ3 (11-ஐதரேட்டு) |
உருகுநிலை | 1,124°செ இல் நீரிலி சிதைகிறது 200°செ இல் ஒற்றைஐதரேட்டு சிதைகிறது 150°செ இல் எப்டாஐதரேட்டு சிதகிறது 2°செ இல் அன்டெக்காஐதரேட்டு சிதைகிறது |
நீரிலி 26.9 கி/100 மி.லி (0 °செ) 35.1 கி/100 மி.லி (20 °செ) 50.2 கி/100 மி.லி (100 °செ) எப்டாஐதரேட்டு 71 கி/100 மி.லி (20 °செ) | |
கரைதிறன் | 1.16 கி/100 மி.லி (18°செ, ஈதர்) மதுசாரம், கிளிசராலில் ஓரளவு கரையும் அசிட்டோனில் கரையாது. |
−50•10−6 செ.மீ3/மோல் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.523 (ஒற்றைஐதரேட்டு) 1.433 (எப்டாஐதரேட்டு) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைசாய்வு (ஐதரேட்டு) |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | பெரிலியம் சல்பேட்டு கால்சியம் சல்பேட்டு இசுட்ரோன்சியம் சல்பேட்டு பேரியம் சல்பேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இந்த உப்பு அடிப்படையான நலவாழ்வு அமைப்பில், முக்கியமாக தேவைப்படுகின்ற மருத்துவப்பொருளாக, உலக சுகாதார நிறுவனத்தால் பட்டியலிடப்பட்டுள்ள அத்தியாவசிய மருந்துப்பொருட்களின் மாதிரிப் பட்டியலில் ஒன்றாக உள்ளது.[3]