மகேந்திர கிரி
From Wikipedia, the free encyclopedia
மகேந்திர கிரி மலை என்பது தென்தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட, காவல்கிணறு கிராமத்தின் அருகிலுள்ள மலையாகும்.[1] மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள இவ்விடத்தின் உயரம் 1654 மீட்டர் (5427 அடி) ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு மையம்(ISRO) நடத்தும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் ஒன்று இதன் மலையடிவாரத்தில் செயல்படுகிறது. இது நாகர்கோவில் பகுதியில் மிக உயர் மலைச்சிகரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.[2]
விரைவான உண்மைகள் மகேந்திர கிரி, உயர்ந்த புள்ளி ...
மகேந்திர கிரி | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,654 m (5,427 அடி) |
புவியியல் | |
அமைவிடம் | திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
பகுதி | IN |
மூலத் தொடர் | மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் |
ஏறுதல் | |
எளிய வழி | உயர்வு/ஒழுங்கற்ற |
மூடு