மகா நிக்கோபார் உயிர்க்கோளக் காப்பகம்
From Wikipedia, the free encyclopedia
மகா நிக்கோபார் உயிர்க்கோளக் காப்பகம் இக்காப்பகம் 885 ச.கி. மீட்டர் பரப்பளவுடன் ஜனவரி 1989ஆம் ஆண்டு இந்தியாவின் ஒன்பதாவது உயிர்க்கோளக் காப்பகமாக யுனெஸ்கோவின் மனிதனும் உயிர்க்கோளமும் என்ற திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது.[1] தற்போது சுமார் 1044 ச.கி. மீட்டரில் பரவியுள்ள இக்காப்பகம் இந்திய யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபர் தீவுகளின் தென்கோடியில் தீவின் 85% ஆக உள்ள மகா நிக்கோபர் தீவில் அமைந்துள்ளது.