மலேசியப் பிரதமர் From Wikipedia, the free encyclopedia
மகாதீர் முகமது (ஆங்கிலம்: Mahathir Mohamad, சீனம்: 马哈迪·莫哈末; பிறப்பு: 10 சூலை 1925)[2] மலேசிய அரசியல்வாதி ஆவார். இவர் 1981 முதல் 2003 வரையும், பின்னர் 2018 முதல் 2020 வரையும் மலேசியப் பிரதமராகப் பதவி வகித்தார்.[3] இவர் லங்காவி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மகாதீர் முகமது Mahathir Mohamad 马哈迪·莫哈末 SMN; DK I (Johor); DK (Kedah); DKNS; DK (Perlis); DK I (Brunei); DUK; SUMW; DUNM; DUPN; SPDK; SBS; SPMJ; DP; SSDK; SPNS; SSAP; SPCM; SSMT; PIS | |
---|---|
2018-இல் மகாதீர் | |
4-வது, 7-வது மலேசியப் பிரதமர் | |
பதவியில் 10 மே 2018 – 24 பெப்ரவரி 2020 இடைக்காலம்: 24 பெப்ரவரி 2020 – 1 மார்ச் 2020[1] | |
ஆட்சியாளர்கள் | கிளாந்தான் சுல்தான் ஐந்தாம் முகமது சுல்தான் அப்துல்லா |
Deputy | வான் அசிசா வான் இஸ்மாயில் |
முன்னையவர் | நஜீப் ரசாக் |
பின்னவர் | முகிதீன் யாசின் |
பதவியில் 16 சூலை 1981 – 31 அக்டோபர் 2003 | |
ஆட்சியாளர்கள் | அகமது சா இசுக்காந்தர் அசுலான் சா துவாங்கு ஜாபார் சலாகுதீன் சிராசுதீன் |
Deputy | மூசா ஈத்தாம், காபார் பாபா அன்வார் இப்ராகிம், அப்துல்லா அகமது படாவி |
முன்னையவர் | உசேன் ஓன் |
பின்னவர் | அப்துல்லா அகமது படாவி |
கூட்டுசேரா இயக்கம் 21-ஆவது பொதுச் செயலர் | |
பதவியில் 20 பெப்ரவரி 2003 – 31 அக்டோபர் 2003 | |
முன்னையவர் | தாபோ உம்பெக்கி |
பின்னவர் | அப்துல்லா அகமது படாவி |
4-ஆவது மலேசிய துணைப் பிரதமர் | |
பதவியில் 5 மார்ச் 1976 – 16 சூலை 1981 | |
பிரதமர் | உசேன் ஓன் |
முன்னையவர் | உசேன் ஓன் |
பின்னவர் | மூசா இத்தாம் |
மலேசிய நிதி அமைச்சர் | |
பதவியில் 5 சூன் 2001 – 31 அக்டோபர் 2003 | |
முன்னையவர் | டாயிம் சைனுதீன் |
பின்னவர் | அப்துல்லா அகமது படாவி |
பதவியில் 7 செப்டம்பர் 1998 – 7 சனவரி 1999 | |
முன்னையவர் | அன்வார் இப்ராகிம் |
பின்னவர் | டாயிம் சைனுதீன் |
மலேசிய உள்துறை அமைச்சர் | |
பதவியில் 8 மே 1986 – 8 சனவரி 1999 | |
முன்னையவர் | மூசா இத்தாம் |
பின்னவர் | அப்துல்லா அகமது படாவி |
மலேசிய தற்காப்பு அமைச்சர் | |
பதவியில் 18 சூலை 1981 – 6 மே 1986 | |
முன்னையவர் | அப்துல் தையீப் மகுமுது |
பின்னவர் | அப்துல்லா அகுமது பதவீ |
வர்த்தக, தொழிற்துறை அமைச்சர் | |
பதவியில் 1 சனவரி 1978 – 16 சூலை 1981 | |
பிரதமர் | உசேன் ஓன் |
முன்னையவர் | அம்சா அபு சமா |
பின்னவர் | அகமது இசுமாயில் |
கல்வி அமைச்சர் | |
பதவியில் 5 செப்டம்பர் 1974 – 31 திசம்பர் 1977 | |
பிரதமர் | அப்துல் ரசாக் உசேன் உசேன் ஓன் |
முன்னையவர் | முகமது யாக்கோப் |
பின்னவர் | மூசா இத்தாம் |
நாடாளுமன்ற உறுப்பினர் லங்காவி மக்களவைத் தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 10 மே 2018 | |
முன்னையவர் | நவாவி அகமது |
பெரும்பான்மை | 8,893 (2018) |
நாடாளுமன்ற உறுப்பினர் குபாங் பாசு மக்களவைத் தொகுதி | |
பதவியில் 24 ஆகத்து 1974 – 21 மார்ச் 2004 | |
முன்னையவர் | புதிய தொகுதி |
பின்னவர் | மோகுத் பகாரும் |
மலேசிய மேலவை (கெடா) உறுப்பினர் | |
பதவியில் 30 திசம்பர் 1972 – 23 ஆகத்து 1974 | |
நாடாளுமன்ற உறுப்பினர் கோத்தா ஸ்டார் செலாத்தான் | |
பதவியில் 25 ஏப்ரல் 1964 – 10 மே 1969 | |
பெரும்பான்மை | 4,210 (1964) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மகாதீர் பின் முகமது 10 சூலை 1925 அலோர் ஸ்டார், மலேசியா |
அரசியல் கட்சி | மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி-பாக்காத்தான் அரப்பான் (2016–இன்று) அம்னோ-தேசிய முன்னணி (1946–2016) |
துணைவர் | சித்தி அசுமா |
பிள்ளைகள் | 7 |
முன்னாள் கல்லூரி | சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் |
கையெழுத்து | |
இணையத்தளம் | இணையதளம் |
இதற்கு முன்னர் 1981 முதல் 2003 வரை நான்காவது பிரதமராகப் பதவியில் இருந்தார். 1946-ஆம் ஆண்டில் இவர் புதிதாக உருவாக்கப்பட்ட அம்னோ கட்சியில் சேர்ந்து தீவிர அரசியலில் இறங்கினார். 2016-ஆம் ஆண்டில் இவர் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி என்ற பெயரில் தனிக் கட்சியைத் தொடங்கினார்.[4][5] 10 மே 2018 அன்று 92 வயதுடைய மகாதீர் முகமது, மலேசியா நாட்டின் பிரதம அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார்.[6][7] 24 பிப்ரவரி 2020 அன்று, மகாதீர் பின் முகமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இவரின் பதவிக்காலத்தில் இவர் ஆசியாவின் ஒரு முக்கிய அரசியல் தலைவராகக் கருதப்பட்டார்.[8] மேற்கத்தைய வாழ்க்கை முறையைப் பெரிதும் விமர்சித்து வந்தார்.[9].
கெடா, அலோர் ஸ்டார் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தவரான மகாதீர் மருத்துவக் கல்வி படித்து மருத்துவராகப் பட்டம் பெற்றார். அம்னோ கட்சியில் இணைந்து செயற்பட்டு வந்த இவர் 1964-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த தேர்தலில் தோல்வியடைந்த இவர் அன்றைய பிரதமர் துங்கு அப்துல் ரகுமானுடன் ஏற்பட்ட சர்ச்சை[10] காரணமாக கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.
துங்கு அப்துல் ரகுமான் பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, மகாதீர் மீண்டும் அம்னோ கட்சியில் இணைந்து நாடாளுமன்றம் சென்றதுடன், அமைச்சரவையிலும் இணைந்தார். 1976-ஆம் ஆண்டில் துணைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1981-இல் பிரதமர் உசேன் ஓன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து மகாதீர் மலேசியாவின் 4-ஆவது பிரதமராகத் தெரிவானார்.
1 ஆகஸ்டு 2023 அன்று, இருதய சிகிச்சைக்காக மகாதீர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டா.[11][12][13]
24 பிப்ரவரி 2020 அன்று, மகாதீர் தம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதே வேளையில், ஆளும் நம்பிக்கை கூட்டணியிலிருந்து 26 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பிபிபிஎம் விலகியது.
மேலும், நீதிக்கட்சியைச் சேர்ந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை கூட்டணியைத் தாங்கள் ஆதரிக்கவில்லை எனத் தெரிவித்தனர். இதனால், நம்பிக்கை கூட்டணி அரசு கவிழ்ந்தது. மாநில அளவில், பக்காத்தான் அரப்பான் அரசு ஜொகூர், மலாக்கா, பேராக், கெடா ஆகிய மாநிலங்களிலும் கவிழ்ந்தது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.