இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
ப. உ. சண்முகம் (P. U. Shanmugam) (15 ஆகத்து 1924 - 11 ஏப்ரல் 2007) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தி.மு.கவின் அமைப்புக்கழக செயலாளர், உயர்நிலை செயல்திட்டக்குழுத்தலைர், அஇஅதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளார் ஆகிய பொறுப்புகளை வகித்த திராவிடத்தலைவரும் ஆவார்.[1] இவர் திருவண்ணாமலையில் உள்ள நகரவை உயர்நிலைப் பள்ளியில் தனது இடைநிலைக் கல்வியை முடித்தார்.[2] 1957ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 1971 மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 1977 களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5] 1980 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மேல்மலையனூர் சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6] இவர் அஇஅதிமுகவின் பொதுச்செயலாளாராக 1980 முதல் 1985 பதவி வகித்தார்.
ப உ சண்முகம் | |
---|---|
பொதுச் செயலாளர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | |
பதவியில் 11 ஜூன் 1980 – 13 மார்ச் 1985 | |
முன்னையவர் | இரா. நெடுஞ்செழியன் |
பின்னவர் | எஸ். இராகவானந்தம் |
உயர்நிலை செயல்திட்டக்குழுத்தலைவர் திராவிட முன்னேற்றக் கழகம் | |
பதவியில் 1989–2007 | |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | ஜானகி ராமன், முன்னாள் புதுவை முதலமைச்சர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிற அரசியல் தொடர்புகள் | மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் (1977) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.