போல்தாவா மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
போல்தாவா மாகாணம் (Poltava Oblast) உக்ரைன் நாட்டில் மத்தியகிழக்கில் அமைந்த மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் போல்தாவா நகரம் ஆகும். 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 13,71,529 ஆக இருந்தது. இதன் முக்கிய நகரங்கள் போல்தாவா, ஹோரிசினி மற்றும் கிரெமென்சுக் ஆகும்.
போல்தாவா மாகாணம்
Полтавська область | |
---|---|
மாகாணம் | |
போல்தாவ்ஸ்கா மாகாணம்[1] | |
ஆள்கூறுகள்: 49°35′22″N 34°33′05″E | |
நாடு | உக்ரைன் |
தலைநகரம் | போல்தாவா |
அரசு | |
• ஆளுநர் | டிமிட்ரோ லுனின் |
• மாகாணச் சட்டமன்றம் | 84 உறுப்பினர்கள் |
• தலைவர் | ஒலேக்சந்தர் பிளிங்கி |
பரப்பளவு | |
• மொத்தம் | 28,748 km2 (11,100 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 6-ஆம் இடம் |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 13,71,529 |
• தரவரிசை | 12-ஆம் இடம் |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கத்திய ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம்) |
அஞ்சல் குறியீடு | 36000-38999 |
பிரதேச குறியீடு | +380-53 |
ஐஎசுஓ 3166 குறியீடு | UA-53 |
மாட்டங்கள் | 25 |
நகரங்கள் (மொத்தம்) | 15 |
• மண்டல நகரங்கள் | 5 |
நகர்புற குடியிருப்புகள் | 21 |
கிராமங்கள் | 1831 |
FIPS 10-4 | UP18 |
இணையதளம் | www.oblrada-pl.gov.ua/ |
28,800 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட போல்தாவா மாகாணம் தினேப்பர் ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் சுமி மாகாணம் மற்றும் செர்னிகிவ் மாகாணம், கிழக்கில் கார்கிவ் மாகாணம், தெற்கில் நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணம், தென்மேற்கில் கிரோவோக்ராட் மாகாணம், மேற்கில் செர்கசி மாகாணம் உள்ளது.
2018-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 14,00,000 ஆகும். இதன் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 49 பேர் வீதம் வாழ்கின்றனர்.[2]
இம்மாகாணத்தில் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயு அதிகம் கிடைப்பதால் அது தொடர்பான ஆலைகள் அதிகம் உள்ளது. மேலும் இரும்பு கனிமங்கள் அதிக அளவில் உள்ளது.
இம்மாகாணத்தில் சர்க்கரை வள்ளி கிழங்கு, சூரியகாந்தி எண்ணெய், உருளைக்கிழங்கு, அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இறைச்சி, பால் பொருட்கள், முட்டை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இம்மாகாணம் 25 மாவட்டங்களும், 5 நகரங்களும், 21 நகர்புற குடியிருப்புகளும், 1862 கிராமங்களும் கொண்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.