இந்தியத் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
பொதுவாக போயபதி சிறீனு என்று அழைக்கப்படும் போயபதி சிறீனிவாசு ( Boyapati Srinivas ) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் தெலுங்கு திரையுலகில் அதிரடித் திரைப்படங்களை இயக்குவதில் மிகவும் பிரபலமானவர். போயபதி இரண்டு மாநில நந்தி விருதுகளைப் பெற்றுள்ளார். [1] [2]
போயபதி ஸ்ரீனு | |
---|---|
2018 இல் சிறீனிவாசு | |
பிறப்பு | போயபதி சிறீனிவாசு பெதகாகனி, குண்டூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஜே. கே. சி. கல்லூரி நாகார்ஜுனா பல்கலைக்கழகம் |
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2002–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | விலேகா |
பிள்ளைகள் | 3 |
உறவினர்கள் | கிருஷ்ண முரளி (உறவினர்) |
போயபதி ஸ்ரீனிவாஸ், ஆந்திரப் பிரதேசம் குண்டூர் மாவட்டத்திலுள்ள பெதகாக்கனியில் பிறந்தவர்.[3] [4] குண்டூரில் உள்ள ஜே. கே. சி. கல்லூரியில் பட்டம் பெற்ற இவர் நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். இவரது குடும்பம் புகைப்பட அரங்கத்தை நடத்தி வருகிறது. புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்ட போயபதி, ஈநாடு நாளிதழில் பகுதி நேர நிருபராகப் பணியாற்றினார்.[5] திரைப்படங்களில் ஒரு தொழிலைத் தொடர, இவர் ஐதராபாத்து சென்றார். இவரது உறவினர் கிருஷ்ண முரளி 1997 இல் முத்யாலா சுப்பையா ஸ்டுடியோவில் இயக்குநர் பிரிவில் பணிபுரியுமாறு போயபதியை பரிந்துரைத்தார் [6] [7] ஒக சின்ன மாதா, கோகுலத்தில் சீதா, பெல்லி சேசுகுண்டம், பவித்ர பிரேமா, அன்னய்யா மற்றும் மனசுன்னா மாறு போன்ற படங்களுக்கு சுப்பையாவுடன் போயபதி பணியாற்றினார்.[5]
போயபதி, விலேகா என்பவரை மணந்தார். தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். [8]
2005 ஆம் ஆண்டில், ரவி தேஜா, மீரா ஜாஸ்மின் மற்றும் பிரகாஷ் ராஜ் நடித்த பத்ரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். துளசி இவரது இரண்டாவது படமாகும். 2010 ஆம் ஆண்டில், நயன்தாரா மற்றும் சினேகா உல்லாலுடன் நந்தமூரி பாலகிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடித்த சிம்ஹா, போயபதியின் மூன்றாவது படம். பின்னர், ஜூனியர் என்டிஆர், திரிசா மற்றும் கார்த்திகா நாயர் ஆகியோர் நடிக்க தம்மு என்ற தனது நான்காவது படத்தை இயக்கினார். [9] [10] பின்னர் 2014 ஆம் ஆண்டில், பாலகிருஷ்ணாவுடன் லெஜெண்ட் படத்திற்காக மீண்டும் இணைந்தார். இது நேர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டது.[9] [10]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.