![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5e/CMVschema-ta.svg/langta-640px-CMVschema-ta.svg.png&w=640&q=50)
போட்டிவிரிடீ
From Wikipedia, the free encyclopedia
போட்டிவிரிடீ (Potyviridae) என்பன செடிகொடிகளைத் தாக்கும் தீநுண்மங்கள். இவை வளையக்கூடிய இழைபோன்ற கோல்வடிவத் நுண்ணுருவ தீநுண்மங்கள் பரணிடப்பட்டது 2008-09-06 at the வந்தவழி இயந்திரம் (flexuous filamentous rod-shaped particles). இவற்றின் மரபணுத் தொகுதியம் (genome) ஒற்றை ஆர்.என்.ஏ நேர்வகை ஆர்.என்.ஏ-க்களால் சூழப்பட்டவை. இவையும் காப்ஃசிட் (capsid) எனப்படும் ஒற்றை தீநுண்மத்தால் குறியூட்டிய (encoded) புரதத்தால் ஆன புற உறையால் சூழப்படவை. இவையெல்லாம் உருளை வடிவ புதைவுகள் பரணிடப்பட்டது 2011-06-18 at the வந்தவழி இயந்திரம் (cylindrical inclusions) (‘pinwheels’ அல்லது முள்ளுருளி) எனப்படும் தீநுண்மப் புதைவுகளை ஏற்படுத்தத் தூண்டுகின்றன. இவை 70 கிலோடால்ட்டன் (kDa)அளவு கொண்ட, ஒற்றை தீநுண்ம மரபணு தொகுதியத்தியத்தில் இருந்து பெற்ற ஒற்றைப் புரதப் பொருளாகும்
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5e/CMVschema-ta.svg/640px-CMVschema-ta.svg.png)
போட்டிவிரிடீ Potyviridae | |
---|---|
தீநுண்ம வகைப்பாடு | |
குழு: | Group IV ((+)ssRNA) |
குடும்பம்: | போட்டிவிரிடீ Potyviridae |
Genera | |
Potyvirus |
மூடுபடலப் புரதத்தில் உள்ள அமினோக் காடிகளின் வரிசையைப் பொருத்து, போட்டிவிரிடீ குடும்பம் ஆறு பேரினங்களாக பகுக்கப்படுகின்றது. பைமோவைரசு என்னும் தீநுண்மம் தவிர மற்றவை எல்லாம் ஒற்றை இழை நுண்மங்கள். ஆறு பேரினங்களாவன:
- பேரினம் Potyvirus; மாதிரி இனம்: உருளைக்கிழங்கு தீநுண்மம் ஒய்(Potato virus Y)
- பேரினம் Rymovirus; மாதிரி இனம்: ரைகிராசு மொசெயிக் தீநுண்மம் (Ryegrass mosaic virus)
- பேரினம் Bymovirus; மாதிரி இனம்: பார்லி மஞ்சள் மொசெயிக் தீநுண்மம்(Barley yellow mosaic virus)
- பேரினம் Macluravirus; மாதிரி இனம்: மக்ளரா மொசெயிக் தீநுண்மம் (Mclura mosaic virus)
- பேரினம் Ipomovirus; மாதிரி இனம்: சக்கரைவள்ளிக் கிழங்கு புள்ளிநோய்த் தீநுண்மம் (Sweet potato mild mottle virus)
- பேரினம் Tritimovirus; மாதிரி இனம்: கோதுமை வரி மொசெயிக் தீநுண்மம் (Wheat streak mosaic virus)
போட்டிவிரிடீ குடும்பத்துள் பெரிய பேரினம்[1] போட்டிவைரசுகள் (போட்டி தீநுண்மங்கள்). இந்த பேரினத்தில் 100 உக்கும் கூடுதலானவை உள்ளன. இத்தீநுண்மங்கள் 720-850 நானோமீட்டர் நீளமுடையவை, இவை அபிடுகள் (aphids)வழி கடத்தப்படுகின்றன.
மக்ளராவைரசு என்னும் பேரினத்தில் உள்ள தீநுண்மங்கள் 650-675 நாமீ நீளம் கொண்டவை. இவையும் அபிடுகள் வழி கடத்தப்படுகின்றன.
ஐப்பொமோவைரசு என்னும் நீதுண்மம், வெள்ளை ஈ (whiteflies) என்பனவற்றால் கடத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும் 750-950 நாமீ நீளம் உடையவை.
டிரைட்டிமோவைரசு (Tritimovirus), ரைமோவைரசு (Rymovirus) ஆகியவை 680-750 நாமீ நீளம் உடையவை. இவை எரியோஃவைடிட் மைட் உயிரினங்கள் பரணிடப்பட்டது 2008-12-08 at the வந்தவழி இயந்திரம் (eriophydid mites) வழி கடத்தப்படுகின்றன.[2])
பைமோவைரசு (Bymovirus) மரபணு தொகுதியத்தில் இரண்டு நுண்மங்கள் உள்ளன (250, 550 நாமீ). இவை கைட்ரிட் காளான் (chytrid fungus)(Polymyxa graminis) வழி கடத்தப்படுகின்றன.