பொந்தியான் மாவட்டம்

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

பொந்தியான் மாவட்டம்map

பொந்தியான் மாவட்டம் (ஆங்கிலம்: Pontian District); மலாய்: Daerah Pontian; சீனம்: 笨珍县; ஜாவி: فونتيان) என்பது மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தின், தென் மேற்கில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு பொந்தியான் கிச்சில் நகரம் தலைநகரமாக விளங்குகிறது.

விரைவான உண்மைகள் பொந்தியான் மாவட்டம்Pontian District Daerah Pontian, நாடு ...
பொந்தியான் மாவட்டம்
Pontian District
Daerah Pontian
Thumb
கொடி
Thumb
ஜொகூரில் பொந்தியான் மாவட்டம்
Thumb
Thumb
      பொந்தியான் மாவட்டம்
ஆள்கூறுகள்: 1°35′N 103°25′E
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
தொகுதிபொந்தியான் மக்களவைத் தொகுதி
உள்ளாட்சிபொந்தியான் நகராட்சி
அரசு
  மாவட்ட அதிகாரிசுல்கிப்லி முகமட் தாகிர்
பரப்பளவு
  மொத்தம்932.64 km2 (360.09 sq mi)
மக்கள்தொகை
 (2010)[1]
  மொத்தம்1,44,324
  அடர்த்தி150/km2 (400/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
82xxx
தொலைபேசிக் குறியீடு+6-07
போக்குவரத்துப் பதிவெண்J
மூடு

இந்த மாவட்டத்தில் உள்ள இரண்டு நகரங்களின் பெயர்களிலும் பொந்தியான் எனும் பெயர் பயன்படுத்தப்படுகிறது, பொந்தியான் பெசார் மற்றும் பொந்தியான் கிச்சில். அவற்றுள் பொந்தியான் கிச்சில் நகரம், பொந்தியான் மாவட்டத்தின் தலைநகரமாக விளங்குகிறது.

இங்குள்ள பெரும்பாலான பகுதிகள் சதுப்பு நிலங்களால் ஆனவை. முக்கியத் தொழிலாக மீன்பிடித் தொழில் உள்ளது.

பொருளாதாரம்

பொந்தியான் மாவட்டம் மீன்பிடி, அன்னாசிப் பண்ணைகள் மற்றும் செம்பனை தோட்டங்களின் மையமாக இருந்தது. இருப்பினும் அண்மைய காலமாக விவசாயம், மீன்பிடி, தொழில்துறை மற்றும் சுற்றுலாத் துறையாக வளர்ச்சி கண்டு வருகிறது.[2]

இந்த மாவட்டத்தின் முக்கியப் பொருளாதார நடவடிக்கைகள் இயற்கைச் சூழல் சுற்றுலா, மீன்பிடி, கடல்சார் மீன் வளர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் உணவு பதப்படுத்துதல்.[3]

நிர்வாகப் பகுதிகள்

பொந்தியான் மாவட்டம் 10 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

  • அப்பி அப்பி (Api-Api)
  • ஆயர் பாலோய் (Ayer Baloi)
  • ஆயர் மாசின் (Ayer Masin)
  • பெனுட் (Benut)
  • ஜெராம் பத்து (Jeram Batu)
  • பெங்காலான் ராஜா (Pengkalan Raja)
  • பொந்தியான் (Pontian)
  • ரிம்பா தெர்ஜுன் (Rimba Terjun)
  • செர்காட் (Serkat)
  • சுங்கை காராங் (Sungai Karang)
  • சுங்கை பீங்கான் (Sungai Pinggan)

தேர்தல் முடிவுகள்

மலேசியப் பொதுத் தேர்தல் 2022

மேலதிகத் தகவல்கள் வேட்பாளர், கட்சி ...
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
அகமட் மசுலான்
(Ahmad Maslan)
பாரிசான் நேசனல்23,20140.815.40
இசா அப்துல் அமீட்
(Isa Ab Hamid)
பெரிக்காத்தான் நேசனல்17,44830.6930.68 Increase
சிசுவான் சைனல் அபிதீன்
(Syazwan Zdainal Abdin)
பாக்காத்தான் அரப்பான்15,90127.9716.42
ஜமாலுதீன் முகமட்
(Jamaluddin Mohamad)
தாயக இயக்கம்3060.540.54 Increase
மொத்தம்56,856100.00
செல்லுபடியான வாக்குகள்56,85698.22
செல்லாத/வெற்று வாக்குகள்1,0301.78
மொத்த வாக்குகள்57,886100.00
பதிவான வாக்குகள்75,212578818.42
Majority5,75810.138.31 Increase
      பாரிசான் நேசனல் கைப்பற்றியது
மூலம்: [4]
மூடு

மலேசியப் பொதுத் தேர்தல், 2018

மலேசிய மக்களவையில் பொந்தியான் மாவட்டத்தின் தொகுதிகள்

மேலதிகத் தகவல்கள் #, தொகுதி ...
மூடு

ஜொகூர் மாநிலச் சட்டமன்றம்

மலேசியப் பொதுத் தேர்தல், 2018

ஜொகூர் மாநிலச் சட்டமன்றத்தில் பொந்தியான் மாவட்டப் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்:[5]

மேலதிகத் தகவல்கள் #, மாநிலம் ...
#மாநிலம்தொகுதிசட்டமன்ற உறுப்பினர்கட்சி
P164 N53பெனுட்அசுனி முகமட்பாரிசான் நேசனல் (அம்னோ)
P164 N54புலாய் செபாத்தாங்முகமட் தக்கிடின் செ மான்பாக்காத்தான் அரப்பான் (அமாணா)
P165 N55பெக்கான் நானாஸ்இயோ துங் சியோங்பாக்காத்தான் அரப்பான் (ஜ.செ.க)
P165 N56குக்குப்முகமட் ஒசுமான் யூசோப்பாரிசான் நேசனல் (அம்னோ)
மூடு

பொந்தியான் பாரிட் இப்ராகிம் தமிழ்ப்பள்ளி

Thumb
பொந்தியான் மாவட்ட மன்றம்

பொந்தியான் மாவட்டத்தில் ஒரே ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் பாரிட் இப்ராகிம் தமிழ்ப்பள்ளி. 1939-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[6]

இந்தப் பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை 64. ஆண்கள் 35 பேர்; பெண்கள் 29 பேர். 14 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

  • பள்ளி தொடர்பான படங்கள்:

பொந்தியான் பாரிட் இப்ராகிம் தமிழ்ப்பள்ளி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.