![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7f/Graph_of_common_logarithm.svg/langta-640px-Graph_of_common_logarithm.svg.png&w=640&q=50)
பொது மடக்கை
From Wikipedia, the free encyclopedia
கணிதத்தில் பொது மடக்கை (common logarithm) என்பது 10 அடிமான மடக்கையாகும். பொது மடக்கையானது அதன் அடிமானத்தின் பெயரால் பதின்ம மடக்கை (decadic logarithm , decimal logarithm) என்றும், இம்மடக்கையின் முன்னோடியான ஆங்கிலக் கணிதவியலாளர் ஹென்றி பிரிக்சின் பெயரால் பிரிக்சிய மடக்கை (Briggsian logarithm) என்றும் அழைக்கப்படுகிறது. log10(x) அல்லது Log(x) எனப் பொது மடக்கைக் குறிக்கப்படுகிறது. வழக்கமாக இது கணிப்பான்களில் "log" என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் கணிதவியலாளர்கள் இயல் மடக்கையைத்தான் (அடிமானம் e ≈ 2.71828) "log" எனக் குறிக்கின்றனர். இக்குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக log10(x) என்பதை lg (x) எனவும், loge(x) என்பதை ln (x) எனவும் எழுத வேண்டுமென ISO 31-11 இன்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
![x இன் மதிப்பு பூச்சியத்தை அணுகும்போது பத்தடிமான மடக்கை வெகுவிரைவாக முடிவிலியை அணுகுவதையும், x இன் மதிப்பு நூறை நெருங்க நெருங்க, பொது மடக்கையின் மதிப்பு மெதுவாக இரண்டை அணுகுவதையும் வரைபடத்தில் காணலாம்.](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7f/Graph_of_common_logarithm.svg/320px-Graph_of_common_logarithm.svg.png)