கிரேக்கத்தின் பெலோபொன்னீஸ் நகரம் From Wikipedia, the free encyclopedia
பைலோஸ் (Pylos, கிரேக்கம்: Πύλος ), வரலாற்று ரீதியாக நவரினோ என்றும் அழைக்கப்படுகிறது, இது கிரேக்கத்தின் பெலோபொன்னீஸ், மெசேனியாவில் உள்ள ஒரு ஊர் மற்றும் முன்னாள் நகராட்சி ஆகும். 2011 உள்ளூர் அரசாங்க சீர்திருத்தத்திற்குப் பிறகு, இது பைலோஸ்-நெஸ்டோராஸ் நகராட்சியின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது. அந்த நகராட்சியின் தலைமையகமாவும், நகராட்சியின் ஒரு அலகாகவும் பைலோஸ் உள்ளது.[2] இது முன்னாள் பைலியா மாகாணத்தின் தலைநகராக இருந்தது. இது நவரினோ விரிகுடாவில் உள்ள முக்கிய துறைமுகமாகவும் உள்ளது. இதன் அருகில் கியாலோவா, பைலா, எலாயோஃபைட்டோ, ஷினோலாக்கா, பலயோனெரோ ஆகிய நகரங்கள் உள்ளன. பைலோசில் 2,345 மக்கள் வசிக்கின்றனர், பைலோஸ் நகராட்சி அலகில் 5,287 (2011) மக்கள் வசிக்கின்றனர்.[3] நகராட்சி அலகு 143.911 கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது.[4]
பைலோஸ் Πύλος | |
---|---|
பைலோஸ் விரிகுடா | |
அமைவிடம் | |
Location within the regional unit | |
அரசாண்மை | |
நாடு: | கிரேக்கம் |
நிர்வாக வலயம்: | பெலோபொன்னீஸ் |
மண்டல அலகு: | Messenia |
நகராட்சி: | Pylos-Nestoras |
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1] | |
நிர்வாக அலகு | |
- மக்கள்தொகை: | 5,287 |
- பரப்பளவு: | 143.91 km2 (56 sq mi) |
- அடர்த்தி: | 37 /km2 (95 /sq mi) |
Other | |
நேர வலயம்: | EET/EEST (UTC+2/3) |
உயரம் (மத்தியில்): | 3 m (10 ft) |
அஞ்சல் குறியீடு: | 240 01 |
தொலைபேசி: | 27230 |
வாகன உரிமப் பட்டை: | KM |
புதிய கற்காலத்திலிருந்து பைலோசில் மக்கள் வசித்துவருகின்றனர். இது மைசீனியன் கிரேக்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க இராச்சியமாக இருந்தது. ஓமரின் இலியாடில் உள்ள பைலோசின் அரசரான நெஸ்டரின் பெயரிடப்பட்ட " நெஸ்டர் அரண்மனை " என்று அழைக்கப்படும் கட்டடத்தின் எச்சங்கள் அருகிலேயே அகழ்ந்து கண்டறியப்பட்டன. பாரம்பரி காலங்களில், இந்த இடம் மக்கள் வசிக்காத இடமாக இருந்தது, ஆனால் பெலோபொன்னேசியன் போரின் போது கிமு 425 இல் பைலோஸ் சமரின் தளமாக மாறியது. அதன்பிறகு, 13 ஆம் நூற்றாண்டு வரை பைலோஸ் குறிப்பிடப்படவில்லை. அது அச்சேயாவின் பிராங்கிஷ் வேள்புல அரசின் ஒரு பகுதியாக மாறியது. போர்ட்-டி-ஜோங்க் அல்லது அதன் இத்தாலிய பெயரான நவரினோ ஆகியவற்றால் அதிகளவில் அறியப்பட்டது, 1280களில் ஃபிராங்க்ஸ் அந்த இடத்தில் பழைய நவரினோ கோட்டையைக் கட்டினார். பைலோஸ் 1417 முதல் 1500 வரை வெனிஸ் குடியரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது, அது உதுமானியப் பேரரசால் கைப்பற்றப்பட்டது. உதுமானியர்கள் பைலோஸ் மற்றும் அதன் விரிகுடாவை கடற்படை தளமாக பயன்படுத்தினர். மேலும் அங்கு புதிய நவரினோ கோட்டையை கட்டினார்கள். 1821 இல் கிரேக்க விடுதலைப் போர் வெடிக்கும் வரை, 1685-1715 இல் புதுப்பிக்கப்பட்ட வெனிஸ் ஆட்சி மற்றும் 1770-71 இல் உருசிய ஆக்கிரமிப்பு ஆகியவற்றைத் தவிர்த்து, இப்பகுதி உதுமானியர் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. எகிப்தின் இப்ரறாகீம் பாசா 1825 இல் உதுமானியர்களுக்ககாக இதை மீட்டெடுத்தார். ஆனால் 1827 நவரினோ போரில் டர்கோ-எகிப்திய கடற்படையின் தோல்வி மற்றும் 1828 மோரியா போர்ப் பயணத்தின் பிரெஞ்சு இராணுவ தலையீடு போன்றவை இப்றாகீமை பெலோபொன்னீசீலிருந்து விலக்கவைத்து, கிரேக்க விடுதலையை உறுதிப்படுத்தியது. தற்போதைய நகரம் 1829 முதல் மோரியா படையெடுப்பின்போது இராணுவ பொறியாளர்களால் கோட்டைச் சுவர்களுக்கு வெளியே கட்டப்பட்டது. மேலும் 1833 இல் அரசின் ஆணையால் பைலோஸ் என்ற பழைய பெயர் மீண்டும் சூட்டப்பட்டு பழைய பெயர் மீட்கப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.