பைசாந்தியம்
பண்டைய கிரேக்க நகரம் / From Wikipedia, the free encyclopedia
இந்தக் கட்டுரை பண்டைய நகரம் பற்றியது. ரோமன் மற்றும் கிழக்கு ரோமன் அல்லது பைசண்டைன் காலகட்டங்களில் (330–1453) இருந்த நகரம் பற்றி அறிய, கான்ஸ்டண்டினோபில் என்பதைப் பாருங்கள். உதுமானியப் பேரரசு மற்றும் நவீன நகரத்திற்கு (1453க்குப் பிறகு),, இசுதான்புல் என்பதைப் பாருங்கள். பேரரசு பற்றியான கட்டுரைக்கு, பைசாந்தியப் பேரரசு என்பதைப் பாருங்கள். பிற பயன்பாட்டுக்கு, பைசாந்தியம் (பக்கவழி நெறிப்படுத்தல்) என்பதைப் பாருங்கள்.
பைசாந்தியம் (Byzantium அல்லது Byzantion, கிரேக்கம்: Βυζάντιον ) என்பது ஒரு பண்டைய கிரேக்க நகர அரசாகும். இது பாரம்பரியக் காலத்தின் பிற்பகுதியில் கான்ஸ்டண்டினோபில் என்றும், தற்காலத்தில் இசுதான்புல் என்றும் அறியப்படுகிறது. பைசாந்தியப் பேரரசின் ஆயிரம் ஆண்டு வரலாற்று காலத்தில் கான்ஸ்டாண்டினோப்பிளின் கிரேக்கப் பெயரான பைசான்டியனும் அதன் லத்தீன்மயமாக்ககபட்ட பைசான்டியமும் அவ்வப்போது மாறுபட்ட அளவுகளில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது. [1] [2] கிமு 7 ஆம் நூற்றாண்டில் மெகாராவில் இருந்து கிரேக்கர்கள் பைசாந்தியத்துக்கு குடியேறினர். இது கி.பி 1453 இல் உதுமானியப் பேரரசால் கைப்பற்றப்படும் வரை இங்கு கிரேக்க மொழியே பேசப்பட்டது. [3]