பேரியம் குளோரேட்டு
From Wikipedia, the free encyclopedia
பேரியம் குளோரேட்டு (Barium chlorate) Ba(ClO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமச் சேர்மம் ஆகும். வெண்மை நிறத்தில் இருக்கும் இச்சேர்மமானது குளோரிக் அமிலத்தினுடைய பேரியம் உப்பாகும். கரையும் தன்மை கொண்ட அனைத்து பேரியம் உப்புகளையும் போல இச்சேர்மமும் நச்சுத்தன்மையும் உறுத்தலையும் அளிக்கிறது. சில சமயங்களில் பச்சை நிற ஒளியை தருவதற்காகப் பட்டாசுத் தொழிலிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் குளோரிக் அமிலத் தயாரிப்பில் பெரும் பங்கும் வகிக்கிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பேரியம் டைகுளோரேட்டு | |
வேறு பெயர்கள்
குளோரிக் அமிலத்தின் பேரியம் உப்பு | |
இனங்காட்டிகள் | |
13477-00-4 Y | |
ChemSpider | 24273 Y |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 26059 |
வே.ந.வி.ப எண் | FN9770000 |
| |
பண்புகள் | |
Ba(ClO3)2 | |
வாய்ப்பாட்டு எடை | 304.23 கி/மோல் |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
அடர்த்தி | 3.18 கி/செ.மீ3, திண்மம் |
உருகுநிலை | 413.9 °C (777.0 °F; 687.0 K) (சிதைவடையும்) |
27.5 கி/100 மி.லி (20 °செ) | |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Barium Chlorate MSDS |
ஈயூ வகைப்பாடு | ஆக்சிசனேற்றி (O) தீங்கானது (Xn) |
R-சொற்றொடர்கள் | R9, R20/22 |
S-சொற்றொடர்கள் | S13, S27 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு