From Wikipedia, the free encyclopedia
பேன்யோசு டெ அக்குவா சான்ட்டா (Baños de Agua Santa), பொதுவாக பேன்யோசு, எக்குவடோர் நாட்டின் மையத்தில் அமைந்துள்ள துங்குராகுவா மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள நகரமாகும். துங்குராகுவா மாகாணத்தின் தலைநகரம் அம்பாட்டோவை அடுத்த இரண்டாவது மக்கள்தொகை மிக்க நகரமாக விளங்கும் பேன்யோசு முதன்மை சுற்றுலாத் தலமாகவும் விளங்குகின்றது. இது "அமேசானுக்கான நுழைவாயில்" என்றறியப்படுகின்றது. அமேசான் காடுகளையும் அமேசான் ஆற்றுப் படுகையில் உள்ள பிற நகரங்களையும் அடையும் முன்னர் மலைப்பகுதியில் அமைந்துள்ள பெரிய நகரமாக இது இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.
பேன்யோசு டெ அக்குவா சான்ட்டா | |
---|---|
அடைபெயர்(கள்): பேன்யோசு | |
நாடு | எக்குவடோர் |
மாகாணம் | துங்குராகுவா |
மாவட்டம் | பேன்யோசு மாவட்டம் |
அரசு | |
• வகை | மேயரும் நகரமன்றமும் |
• மேயர் | மார்லோன் பேப்ரிகோ குவாரா சில்வா |
ஏற்றம் | 1,820 m (5,971 ft) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 14,653[1] |
நேர வலயம் | ஒசநே-5 (எக்குவடோர் நேரம்) |
இடக் குறியீடு | (0)3 |
இணையதளம் | www |
துங்குராகுவா எரிமலையின் வடக்கு அடிவாரத்தில் 1,820 மீட்டர்கள் (5,971 அடி) உயரத்தில் பேன்யோசு அமைந்துள்ளது.[2] இந்த எரிமலையின் செயற்பாட்டை தேசிய பல்நுட்பியல் பள்ளியின் புவியியற்பியல் கழகம் கண்காணித்து வருகின்றது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.