பெரும் நீர்நாய்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பெரும் நீர்நாய் (Pteronura brasiliensis) என்பது தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட நீர்நாய் இனமாகும். இது மரநாய்வகையி குடும்பத்தின் மிக நீளமான உடல் கொண்ட விலங்காகவும் 1.7 மீட்டர்கள் (5.6 அடி) வரை வளரக்கூடிய வகையில் தகவமைத்துக் கொண்டுள்ள ஒரே கொன்றுண்ணியாகவும் உள்ளது. மற்ற மரநாய்வகையி விலங்குகள் போலன்றி இது சமுதாய வாழ்க்கைக்குரியது. மூன்று முதல் எட்டுவரையான குழுவாக வாழும். பொதுவாக தம் பகுதியில் அமைதியான விலங்காகக் காணப்பட்ட போதிலும் குழுக்களுக்கிடையில் மூர்க்கத்தனமானது. இது பகல் நடத்தைக்குரியதாக பகலில் செயற்றிறன் மிக்கதாகக் காணப்படும். இது ஒரு சத்தமிடும் விலங்கினமாக கோபம் மற்றும் மீளமைதலின் போது தனித்துவமான ஒலியெழுப்புவது பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பெரும் நீர்நாய் | |
---|---|
பெரும் நீர்நாய் | |
உயிரியல் வகைப்பாடு | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மரநாய்வகையி |
துணைக்குடும்பம்: | நீர்நாய் |
பேரினம்: | Pteronura |
இனம்: | brasiliensis |
Giant otter range |
பெரும் நீர்நாய் தென்னமெரிக்காவின் வட மத்திய பகுதியில், அதிலும் அதிகமாக அமேசன் ஆறு மற்றும் பந்தானல் பகுதியில் வாழ்கிறது.
இதன் பரவல் பெருமளவு குறைவடைந்து செல்வதுடன் தொடர்ச்சியற்றும் காணப்படுகின்றது. 1950,1960 களில் உச்சமடைந்த அவற்றின் மென்மையான தோலுக்கான வேட்டையாடல்களால் அவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இவ்விலங்குகளின் எண்ணிக்கை காடுகளில் 5,000ஐ விடக் குறைந்தமையால் 1999 இல் ஆபத்துக்குள்ளான விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இது அமெரிக்க வெப்ப மண்டலப் பகுதியில் காணப்படுகின்ற மிக ஆப்த்துக்குள்ளான விலங்கு ஆகும். இவற்றின் வாழிடம் பாதிப்புக்குள்ளாதல் மற்றும் இடர்நிலை என்பன அதிகமானதாகும். இராட்சத நீர்நாய் ஒரு பிறப்பாக்க வளம் குறைந்த விலங்காகவும் உள்ளது ; 2013 இல் 60 விலங்குகள் மட்டுமே பிறந்தன.[1]
பெரும் நீர்நாய் ஈரூடகவாழி வாழ்க்கை முறையைக் காட்டுவதற்காக பல்வேறு இசைவாக்கங்களைக் காட்டுகின்றன. அவை; உடல் குறைந்தளவு மயிர்களால் மூடப்பட்டிருத்தல், செட்டை போன்ற வால், துடுப்புப் பாதங்கள் என்பனவாகும். இந்த விலங்கினங்கள், அடிக்கடி வெள்ளத்தால் நிரம்பக்கூடிய நன்னீர் ஆறுகளையும் ஓடைகளையும் விரும்புவதுடன் ஏரிகள் நீர்வீழ்ச்சிகளையும் விரும்பும். தமது உணவு இடத்திற்கு அணமையில் தங்கும் முகாம்களை அமைப்பதற்கா அங்குள்ள தாவரங்களை துப்புரவு செய்யும். இராட்சத நீர்நாய் தனித்துவமாக கெளுத்தி முதலிய மீன்களை உண்பதுடன் ஆமை, நண்டு, பாம்பு முதலானவற்றையும் உண்ணும். மனிதரைத் தவிர இதற்கு குறிப்பான கொன்றுண்ணி இல்லை.
மரநாய்வகையி குடும்பத்தின் நீர்நாய் என்ற துணைக்குடும்பத்தில் உள்ள இனங்களில் ஒன்று பெரும் நீர்நாய் ஆகும். இந்த இனத்தில் P. b. brasiliensis மற்றும் P. b. paraguensis என்று இரு துணையினங்கள் உள்ளன.[2]
பெரும் நீர்நாய் பரிய உடலமைப்புள்ள, கூட்டமாக வழும், ஒரு பகலாடி விலங்காகும். ஆரம்பகால நாடுகாண் பயணிகள் அவர்களின் படகுகளைச் சுழ்ந்து கொள்ளும் சத்தமிடும் விலங்காக கூறுவர். 1970களின் பிற்பகுதியில் டியுப்பிலெக்சின் முன்மாதிரிகள் வரை இவ்விலங்கு பற்றி சிறியளவிலான தகவல்களே காணப்படுகின்றன[3] இந்த அழிவுக்குள்ளாகும் விலங்கு பற்றி அக்காலத்தில் தான் ஒரு ஆராய்ச்சி கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
உருவவியல் மற்றும் நடத்தைகளைக் கொண்டு பெரும் நீர்நாயை மற்றைய நீர்நாயில் இருந்து இலகுவில் வேறுபடுத்த முடியும். மரநாய்வகையி குடும்ப விலங்கில் பாரிய உடல் நீளத்தை இவ்விலங்கு காட்டிய போதும் கடல் நீர்நாயும் பாரியதாகக் காணப்படும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.