ஒரு கீரை From Wikipedia, the free encyclopedia
பெரும்பாளை (Chard) அல்லது சுவிசு பெரும்பாளை (பீட்டா வல்காரிசு சிற்றினம். வல்காரிசு, சிக்ளாக் குழு, பிளாவெசென்சுக் குழு) (/tʃɑːrd/) என்பது ஒரு சீமைக் கீரைவகையாகும். இது பிளாவெசென்சுக் குழுவிலும் சிக்ளாக் குழுவிலும் அமையும் பயிரிடும்வகைகளில் ஒன்றாகும். இதன் இலைத்தண்டு மிகப் பெரியதாக அமைகிறது. தண்டையும் தனியாக சமைத்து உண்ணலாம்.[1] சிக்ளாக் குழு வகை புதினா பீட்கீரையாகும்மிதன் கீரை பசுமையாகவோ செந்நிரமாகவோ அமைகிறது; இலையகத் தண்டு வழக்கமாக வெண்ணிறத்திலோ மஞ்சள் நிறத்திலோ செந்நிறத்திலோ இருக்கும்.[2]
பெரும்பாளைக் கீரை Chard | |
---|---|
செந்தண்டுள்ள பெரும்பாளைக் கீரை | |
இனம் | பீட்டா வல்காரிசு |
துணையினம் | பீட்டா வல்காரிசு சிற்றினம். வல்காரிசு |
பயிரிடும்வகைப் பிரிவு | சிக்ளாக் குழு, பிளாவெசென்சுக் குழு |
தோற்றம் | கடற்பீட்ரூட் (பீட்டா வல்காரிசு சிற்றினம். மாரிட்டைமா) |
பயிரின வகை உறுப்பினர்கள் | பல. |
அனைத்துக் கீரைகளைப் போலவே பெரும்பாளைக் கீரையும் ஊட்டச்சத்துகள் மிகுந்ததாகும். உடல்நலம் பேணவல்ல இக்கீரையை மக்கள் விரும்பி உண்கின்றனர்.[3] இது பீட்போல உள்ளதால், பல நூற்றாண்டுகளாகச் சமைத்து உண்ணப்படுகிறது. இதன் பொதுப் பெயர்கள் குழப்பந் தருவன;[4] இதற்கு வெள்ளி பீட், நிலைப் புதீனா, பீட் புதீனா, கடற்கேல் பீட், or பீட் கீரை எனப் பல பொதுப் பெயர்கள் வழங்குகின்றன.[5][6]
பெரும்பாளை ஆண்டுக்கு இருமுறை விளையும் பயிராகும். வழக்கமாக, வட அரைக்கோளத்தில், அறுவடைக் காலத்தைக் கணக்கிட்டு ஜூன் முதல் அக்தோபர் மாதத்துக்குள் விதைப்பு நடக்கிறது. இக்கீரையை இளங்கீரையாக அறுவடை செய்யலாம்; அல்லது கீரையும் தண்டும் நன்கு முதிர்ந்த பிறகும் அறுவடை செய்யலாம். அறுவடையைத் தொடர்ந்து மும்முறைகளில் செய்யலாம்.[7] பச்சைக் கீரை எளிதாகக் கெட்டுவிடக் கூடியதாகும்.
பெரும்பாளைக் கீரை மிளிரும் பச்சை நிறத்தில் முகடுடைய பேரலகு(பெருமடல்)களைக் கொண்டதாகும். இதன் இலையும் தண்டும், பயிரிடும் வகையைப் பொறுத்து, வெண்ணிரத்திலோ மஞ்சள் நிறத்திலோ செந்நிறத்திலோ அமையும்.[2]
இது இளவேனிற்கால அறுவடை தாவரமாகும். வட அரைக்கோளத்தில் இது ஏப்பிரலில் அறுவடை செய்யப்படுகிறது. அறுவடை மே மாதம் முடியும் வரையிலும் தொடர்கிறது. இது கேல், புதினா, சிறுகீரையை விட நீண்ட அறுவடைக் காலமுள்ள வன்மை மிக்க இலைமடல்களைக் கொண்ட கீரைவகை ஆகும். நண்பகல் வெப்பநிலை தொடர்ந்து 30 °C (86 °F) அளவை விட உயரும்போது இக்கீரையின் அறுவடைக் காலம் முடிவுக்கு வரும்.
பெரும்பாளைக் கீரை, சமைத்து உப்பிடாததில் அமையும் ஊட்டச்சத்துகள் பின்வருமாறு:
குறிப்பு=அமெரிக்கத் தரவுத் தளம் இணைப்பு பரணிடப்பட்டது 2017-07-23 at the வந்தவழி இயந்திரம்
அப்போது பறித்த கீரையைப் பச்சையாகவே காய்குவைகள், நறுஞ்சுவைநீர்கள், மூட்டையாப்பங்கள் ஆகியவற்ரில் நேரடியகப் பயன்படுத்தலாம்.[8] The raw leaves can be used like a tortilla wrap.[8] பெரும்பாளைக் கீரைகளும் தண்டுகளும் வழக்கமாக சமைத்து உண்ணப்படுகின்றன. சமைப்பதால் அதன் கடுப்பும் காரமும் குறைகிறது.[8]
பெரும்பாளைக் கீரையின் 100 கிராமில் 19 கி.கலோரி உணவுச் சத்துகளும் 19% அளவினும் கூடுதலான அன்றாட ஊட்டப் பொருள்களும் உயிர்ச்சத்துகள் A, K, and C ஆகியன முறையே 122%, 1038%, 50%, அளவுகளிலும் அமைகின்றன.[3] பச்சைக் கீரையில் கணிசமான அளவு ஈ உயிர்ச் சத்தும் மகனீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், இரும்பு போன்ற கனிமச்சத்துகளும் உள்ளன.[3] ஆனால், பச்சைக் கீரையில் குறைந்த அளவே புரதமும், கொழுப்பும், உணவு நார்ப்பொருளும் மாவுப் பொருள்களும்(கரிம நீரகவேற்றுகளும்) அமைகின்றன.[3]
சமைத்த கீரையில் உயிர்ச்சத்துகளும் கனிமச்சத்துகளும் குறைந்தாலும், அது இன்னமும் கணிசமான அன்றாட ஊட்டப் பொருள்களை வழங்குகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.