பெராக்சியிருசல்பேட்டு
எதிரயனி (வேதித் தொகுதி) / From Wikipedia, the free encyclopedia
பெராக்சியிருசல்பேட்டு(peroxydisulfate) என்பது S
2O2−
8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் அயனியாகும். பொதுவாக இது பெர்சல்பேட்டு அயனி என்று அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் பெராக்சோவொருசல்பேட்டு, SO2−
5.அயனியையும் இது குறிக்கிறது. பெராக்சியிருசல்பேட்டு அயனியைக் கொண்டிருக்கும் உப்புகள் தோராயமாக ஆண்டொன்றுக்கு 5,00,000 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சோடியம் பெர்சல்பேட்டு (Na2S2O8), பொட்டாசியம் பெர்சல்பேட்டு (K2S2O8), அமோனியம் பெர்சல்பேட்டு ((NH4)2S2O8) போன்றவை முக்கியமான சில உப்புகளாகும். இவ்வுப்புகள் யாவும் நிறமற்றவை, நீரில் கரையக்கூடியவை மற்றும் வலிமையான ஆக்சிசனேற்றிகள் ஆகும்.[1]