பெப்சிஸ்-குளவி
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பெப்சிசு (Pepsis) குளவிகள் தனிமை விரும்பிகள். அழகானவை. நீல நிற உடலும், செந்நிற இறகுகளும் உடையவை.விரிந்த நிலையில் இறகுகள் நான்கு அங்குல இடத்தை அடைக்கும்.மலரிலுள்ள தேனை உண்டு வாழ்பவை. எதிரியை தாக்குவதற்கு ஆயத்தப்படும்போது அருவருப்பான நாற்றத்தை உண்டாக்கும். இதன் கொடுக்குகளின் நஞ்சு, மற்ற குளவிகளைவிட அதிகம். பருவமடைந்து முதிர்ந்த குழவிகள் சில மாதங்களே உயிர் வாழும்.
பெப்சிசு | |
---|---|
பெப்சிசு அல்போசின்ங்டா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | கைமினாப்பிடிரா |
குடும்பம்: | பாம்ப்ளிடே |
பேரினம்: | பெப்சிசு பேப்ரிசியசு, 1804 |
மாதிரி இனம் | |
பெப்சிசு ரூப்ரா பேப்ரிசியசு, 1793 (= இசுபாக்சு ரூப்ரா துருரை, 1773) | |
சிற்றினம் | |
சிற்றினங்கள் |
பெப்சிசு (பண்டைய கிரேக்க மொழியில் இருந்து πέψι லிட். பெப்சிசு என்றால் 'செரிமானம், சமையல்') என்பது பாம்பிலிடே குடும்பத்தைச் சேர்ந்த சிலந்தி குளவிகளின் பேரினமாகும்.
குளவிகள் தனக்கு உகந்த வகையான சிலந்தியைத் மட்டுமே உணவிற்காக தேர்ந்தெடுத்துக் கொள்கிறது பெப்சிசு இனக் குளவிகள் தாரன்டூலா சிலந்தியை மட்டுமே உணவாக ஏற்றுக்கொள்ளும்.வேறு இனச் சிலந்தியைத் தாக்குவதே இல்லை.தனது உணரவலைகளின் மூலம் தாரன்டூலா சிலந்தியைத் தொட்டுப்பார்க்கும்.சிலந்தி தனது கால்களைத் தூக்கிப் பார்த்து பொறுமையாகக் காத்திருக்கும்.குளவி தனக்கு தகுதியான இரையா என்பதைச் சோதிக்க,குளவியின் மேல், கீழ்ப் புறத்தில் ஓர்ந்து கண்டறியும்.இனத்தைக் கண்டறிந்த பின்பு சிலந்திக்கு அருகில் ஒரு குழியைத் தனது கால்களின் உதவியோடு தோண்ட ஆரம்பிக்கும்.சுமார் 8_-10அங்குல ஆழமும் சிலந்தி உள்ளே செல்லும் அளவிற்கான அகலமும் உடைய குழியைத் தோண்டும்.அவ்வபோது சிலந்தி குழிக்கு அருகில் உள்ளதா என பார்த்துக் கொள்ளும்.தனக்கான இனத்தைச் சார்ந்த இரையா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு குளவிமீது தன் தாக்குதலைத் வேகமாகத் தொடங்கும்.
சிலந்தியின் கால்கள் இணையும் மென்மையான பகுதியில் தனது கொடுக்கை நுழைத்து நஞ்சைச் செலுத்தும்..மீண்டும் மீண்டும் தாக்குதலை நடத்தும்.ஆனால் சிலந்தி எந்தவிதப் பாதுகாப்பு நடத்தையும் மேற்கொள்ளாது இருப்பது வியப்பைத் தருகிறது.சிலந்தியின் கால்களைப் பிடித்து இழுத்துக் குழியினுள் தள்ள முயற்சிக்கும்போது தான் தற்காப்பு முயற்சியை மேற்கொள்ளும்.இரண்டும் புரண்டு கொண்டு நகரும்போது தனது நஞ்சால் சிலந்தியை செயலற்றுபோகச் செய்யும்.கால்கள் அசையாமல்,முதுகுப்புறமாக சாய்ந்து கிடக்கும்.இதயத்துடிப்பு ஓய்ந்து விடும்.
எதிரியை வீழ்த்திய பின்பு குளவி தன் உடலை தரையின் மீது உராயச் செய்து,கால்களை தேய்த்துத் தூய்மை செய்து கொள்ளும்.சிலந்தியின் வயிற்றிலிருந்து வடியும் இரத்தத்தை உறிஞ்சிக் கொள்ளும்.தன் தாடையால் சிலந்தியின் காலைப்பற்றிக் கொண்டு குழியில் தள்ளும்.
சிலந்தியின் வயிற்றில் பிசுபிசுப்பான நீர்மத்தைச் சுரந்து அதன்மீது முட்டைகளை இடும்.பின்பு குழியை தன் கால்களின் உதவியோடு மூடிவிட்டு சென்றுவிடும்.முட்டையிலிருந்து வெளியே வரும் சேய் குளவி,தனக்கு உணவான சிலந்தியை விட மிகச் சிறியது.ஆனாலும் மயக்கத்தில் உள்ள சிலந்தியை மட்டுமே உண்டு வாழ்கிறது.முதிர்ந்த பின்பு இடத்தைவிட்டு நகர்ந்துவிடுகிறது.கடின ஓடு மட்டுமே எஞ்சியுள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.