![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f6/Penan_woman.jpg/640px-Penan_woman.jpg&w=640&q=50)
பெனான்
போர்னியோ, சரவாக், புரூணை நிலப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் / From Wikipedia, the free encyclopedia
பெனான் அல்லது பெனான் மக்கள் (மலாய்: Kaum Penan அல்லது Orang Penan; ஆங்கிலம்: Penan People); என்பவர்கள் போர்னியோ சரவாக்; புரூணை ஆகிய நிலப்பகுதிகளில் வாழும் நாடோடி பழங்குடி மக்கள் (Nomadic Indigenous People) ஆகும்.
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
![]() சரவாக் உலு பாராம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெனான் பெண். | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
16,000[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
போர்னியோ: | |
![]() ![]() | 16,281 (2010)[2] |
![]() | 300[3] |
மொழி(கள்) | |
பெனான் மொழி, மலாய் மொழி (சரவாக் மலாய் மொழி) | |
சமயங்கள் | |
புங்கான் (நாட்டுப்புற மதம்), கிறிஸ்தவம் (பெரும்பான்மை)[4] | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
கென்னியா |
மூடு
புரூணையில் ஒரே ஒரு சிறிய சமூகமாக இருந்தாலும்; அவர்களில் பாதி பேர் இசுலாத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர். வேட்டையாடுதல்; வனப் பொருள்கள் சேகரித்தல்; ஆகியவற்றை முதன்மையாகக் கொண்ட பழங்குடி மக்களில் எஞ்சியிருக்கும் கடைசி மக்களில் பெனான் மக்களும் ஒரு தொகுதியினர்.[5]